பயமில்ல... கண்ட நாயோட எதுக்கு வம்புனு பார்த்தேன்? - ஒரே டுவிட்டில் பயில்வான் ரங்கநாதனை டர்ராக்கிய கஸ்தூரி

Ganesh A   | Asianet News
Published : Feb 11, 2022, 05:36 AM IST
பயமில்ல... கண்ட நாயோட எதுக்கு வம்புனு பார்த்தேன்? - ஒரே டுவிட்டில் பயில்வான் ரங்கநாதனை டர்ராக்கிய கஸ்தூரி

சுருக்கம்

80களுக்கு முன்பிலிருந்தே சினிமாவில் நடித்து வருவதால், அப்போதைய நடிகர், நடிகைகள் குறித்து ஏடாகூடமான விஷயங்களை பகிர்வதை வழக்கமாக வைத்துள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக வலம் வந்தவர் பயில்வான் ரங்கநாதன். பத்திரிக்கையாளரான இவர், நடித்து பிரபலமானதை விட நடிகர், நடிகைகள் குறித்து சர்ச்சையாக பேசியதன் மூலம் மிகவும் பிரபலமானார். யூடியூப்பில் நடிகர், நடிகைகள் குறித்து அந்தரங்க தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். 80களுக்கு முன்பிலிருந்தே சினிமாவில் நடித்து வருவதால், அப்போதைய நடிகர், நடிகைகள் குறித்து ஏடாகூடமான விஷயங்களை பகிர்வதை வழக்கமாக வைத்துள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

அந்தவகையில், சமீபத்தில் இவர் பேசிய வீடியோவில் நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, ஓவியா ஆகியோர் குறித்து பேசி இருந்தார். குறிப்பாக கஸ்தூரி குறித்தும் கொச்சையாக பேசி இருந்தார். இதைப்பார்த்த ரசிகர் ஒருவர், டுவிட்டரில் ஆக்டிவாக இருக்கும் நடிகை கஸ்தூரியின் பார்வைக்கு இந்த வீடியோவை கொண்டு சென்றார்.

இதைப் பார்த்த கஸ்தூரி பயில்வான் ரங்கநாதனை ஒரே டுவிட்டில் டர்ராக்கி உள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது: “பீயை மிதிக்க கூடாதுன்னு தள்ளி நடக்கிறோம், அது  பயம் இல்லை. கண்ட நாயோட எதுக்கு வம்புன்னு பாத்தேன்...இந்த முழு பொய்யனை இனியும் சும்மா விட்டா பெத்த அம்மாவையே கூட தப்பா பேசுவான்” என குறிப்பிட்டுள்ளார். 

மேலும் விரைவில் நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும், இதற்காக நடிகர், நடிகைகள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் ஆதரவளிக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நடிகை கஸ்தூரியின் இந்த டுவிட்டர் பதிவு சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பட்டு வேஷ்டி சட்டையில் மணமக்களை வாழ்த்திய தளபதி விஜய் – தயாரிப்பாளர் சிவா இல்ல திருமண நிகழ்ச்சியின் சுவாரஸ்யம்!
ஆக்‌ஷனில் இறங்கிய பாண்டியன்: போதுமுடா சாமி…பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இந்த வார புரோமோ வீடியோ!