
’இலங்கையில் நடந்த ஒரு போட்டியில் ஆணழகன் பட்டம் வென்றபோது அந்நிகழ்ச்சியை நடத்திய பென் நிர்வாகியுடன் படுக்கையைப் பகிர்ந்துகொண்டதால் தான் நான் பட்டம் வென்றேன் என்று என்னைப்பற்றி அவதூறு பரப்பினார்கள்’ என்று நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் தர்ஷன் கண்ணீர் எபிசோட் ஒன்றை எடுத்துவிட்டார்.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 யில் தற்போது, டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. முதல் நாளில் பங்கேற்ற போட்டியாளர்களுடன் புதிதாக மீரா மிதுன் இணைந்துள்ளார். போட்டியாளர்கள் ஒவ்வொருக்கும் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டு அதில் அவர்கள் தங்களது அனுபவங்களை பேசி வருகிறார்கள்.அந்த வகையில், ஒவ்வொரு வாழ்வில் மறக்க முடியாத சோகமான சம்பவங்கள் குறித்து பேசி வருவதால், மற்ற பிக் பாஸ் போட்டியாளர்கள் கண்ணீர் விட்டு அழுகிறார்கள்.
இசைக்கலைஞர் மோகன் வைத்யாவைத் தொடர்ந்து நேற்று நடிகர் சித்தப்பு சரவணன் தனது இரண்டாவது திருமணம் குறித்துப்பேசி அழவைத்தார். இந்த நிலையில், இலங்கையை சேர்ந்த மாடலான தர்ஷன், தனது வாழ்க்கையில் நடந்த சோகமான சம்பவம் குறித்து பேசும் போது, பெண் மேனஜர் ஒருவருடன் படுத்துதான் ஆன் அழகன் போட்டியில் வெற்றி பெற்றதாகவும், அவரை விமர்சித்ததாக கூறி வருத்தம் தெரிவித்தார்.
இது குறித்து தொடர்ந்து பேசிய தர்ஷன், ”நான் மிஸ்டர் ஸ்ரீலங்கா பட்டம் வென்றதை பிடிக்காத பலர் என்னை விமர்சித்தனர். நான் அந்நிகழ்ச்சியின் பெண் மேனேஜருடன் படுத்ததால் ஜெயித்தேன் என்று கூட விமர்சித்தார்கள். நான் இன்டர்நேஷனல் போட்டிக்கு செல்ல ஸ்பான்சர் இல்லாமல் போனதால் என் அம்மா தன்னுடைய நகையை விற்று தருகிறேன் நீ விமானத்திலாவது சென்று வந்துவிடுஎன்று அனுப்பி வைத்தார்’ என உருகவைத்தார் தர்ஷன். இன்னும் எத்தனை கண்ணீர் எபிசோடுகளைக் காணவேண்டிவருமோ?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.