
Dharmendra body was cremated : பாலிவுட் சினிமாவில் கிட்டத்தட்ட 300க்கும் அதிகமான படங்களில் நடித்தவர் நடிகர் தர்மேந்திரா. கடந்த 1935ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ஆம் தேதி பஞ்சாபின் லூதியானா மாவட்டத்தில் உள்ள நஸ்ராலி என்ற கிராமத்தில் பிறந்தார். அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்விவியும் பயின்றுள்ளார். 1952ல் பக்வாராவில் பட்டம் பெற்றார். 1960ல் வெளியான 'தில் பி தேரா ஹம் பி தேரே' படத்தின் மூலம் தர்மேந்திரா தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார்.
அதன் பிறகு பல தசாப்தங்களாக பாலிவுட்டின் உச்சத்தில் இருந்தார். 60, 70, 80களில் இந்தி சினிமாவின் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கினார். ஹக்கீகத், ஃபூல் அவுர் பத்தர், மேரா காவ்ன் மேரா தேஷ், சீதா அவுர் கீதா, சுப்கே சுப்கே, ஷோலே போன்ற படங்களில் தனது அற்புதமான நடிப்பால் பெரிய திரைகளை ஆண்டார். இந்திய சினிமா வரலாற்றில் மிகவும் அழகான மற்றும் வணிகரீதியாக வெற்றி பெற்ற நடிகர்களில் ஒருவராக தர்மேந்திரா ஆனார்.
பாலிவுட்டின் 'ஹீ-மேன்'
பாலிவுட்டின் 'ஹீ-மேன்' என்று தர்மேந்திரா அழைக்கப்பட்டார். ஆறு தசாப்தங்களுக்கும் மேலான தனது சினிமா வாழ்க்கையில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்தி சினிமாவில் அதிக வெற்றிப் படங்களைக் கொடுத்த சாதனையையும் தர்மேந்திரா படைத்துள்ளார். 1973ல் எட்டு ஹிட் படங்களையும், 1987ல் தொடர்ச்சியாக ஏழு ஹிட் மற்றும் ஒன்பது வெற்றிப் படங்களையும் கொடுத்தார். இது இந்தி சினிமா வரலாற்றில் ஒரு சாதனையாகும்.
இந்த நிலையில் தான் சில காலமாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தர்மேந்திரா மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எனினும், அவரது குடும்பத்தினர் அவருக்கு வீட்டிலேயே வைத்து சிகிச்சையளிக்க முடிவு செய்ததைத் தொடர்ந்து 2 நாட்களுக்கு பிறகு மருத்துவமனையிலிருந்து டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டார். இந்த நிலையில் தான் இன்று பிற்பகல் அவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 89. அவரது மறைவு பாலிவுட் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து அமிதாப் பச்சன், ஷாருக்கான், காஜோல், ஷில்பா ஷெட்டி, அனுபம் கேர், தீபிகா படுகோன், ரன்வீர், அனில் கபூர், சஞ்சய் தத் என்று பாலிவுட் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என்று பலரும் இரங்கல் தெரிவித்தனர். இந்த நிலையில் தான் தர்மேந்திரா உடல் இன்று தகனம் செய்யப்பட்டது.
அவரது குடும்பத்தினர் இறுதி சடங்கு செய்த பிறகு தர்மேந்திரா உடல் தகனம் செய்யப்பட்டது. தர்மேந்திராவுக்கு முதல் மனைவி பிரகாஷ் கவுர், இரண்டாவது மனைவி நடிகை ஹேமமாலினி மற்றும் ஆறு குழந்தைகள் உள்ளனர். முதல் திருமணத்தின் மூலம் சன்னி தியோல், பாபி தியோல் என்ற மகன்களும், விஜேதா தியோல் மற்றும் அஜீதா தியோல் என்ற மகள்களும், இரண்டாவது திருமணத்தின் மூலம் ஈஷா தியோல், அஹானா தியோல் என்ற மகள்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.