“நானும் அதையே நம்புகிறேன்”... ‘ஜகமே தந்திரம்’ ரிலீஸ் குறித்து தெளிவாக குழப்பிய தனுஷ்...!

By Kanimozhi PannerselvamFirst Published Feb 2, 2021, 6:37 PM IST
Highlights

ஜகமே தந்திரம் திரைப்படம் தியேட்டரிலா அல்லது ஓடிடியிலா என்ற பேச்சுக்கள் எழுந்து வரும் நிலையில் தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து ஒரு பதிவிட்டுள்ளார். 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, கலையரசன்  உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். மாமனாரை வைத்து பேட்ட இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் மருமகனை வைத்து என்ன செய்திருக்கிறார் என்பதை பார்க்க தனுஷ் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் தயாரித்துள்ளார். 

பல மாதங்களுக்கு முன்பே அனைத்து வேலைகளும் நிறைவடைந்த போதும், இடையில் வந்த கொரோனா பிரச்சனையால் பட ரிலீஸ் தள்ளிப்போனது. பொங்கல் விருந்தாக மாஸ்டர் திரைப்படம் வெளியான பிறகு படத்தை தியேட்டரில் இறங்கலாம் என படக்குழு முடிவு செய்திருந்தது. அதேபோல் மாஸ்டர் திரைப்படத்திற்கும் தியேட்டர்களில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜும் ஜகமே தந்திரம் கண்டிப்பாக தியேட்டரில் தான் வெளியாகும் என உறுதியாக கூறிவந்தார். 


இதனிடையே ஜகமே தந்திரம் திரைப்படத்தை நெட் பிலிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியானது. கொரோனா பிரச்சனைகள் எல்லாம் மெல்ல விலகி, இம்மாதம் முதல் தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், இப்படி எல்லாம் செய்வார்களா? என தனுஷ் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சில தினங்களுக்கு முன்பு  கூட ட்விட்டரில் #JagameThandhiram, #ShameOnUYNot ஆகிய ஹேஷ்டேக்குகளை ட்ரெண்ட் செய்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். 

I am hoping for the theatrical release of Jagame Thandiram like the theatre owners, exhibitors, distributors, cinema lovers and most of all my fans. Fingers crossed

— Dhanush (@dhanushkraja)

ஜகமே தந்திரம் திரைப்படம் தியேட்டரிலா அல்லது ஓடிடியிலா என்ற பேச்சுக்கள் எழுந்து வரும் நிலையில் தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து ஒரு பதிவிட்டுள்ளார். அதில், தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், சினிமா பிரியர்கள், என் ரசிகர்களைப் போல் ‘ஜகமே தந்திரம்’ படம் தியேட்டரில் வெளியாகும் என எதிர்பார்க்கிறேன்” Finger Crossed என பதிவிட்டுள்ளார். இதிலும் உறுதியாக தியேட்டரில் வெளியாகும் என தனுஷ் குறிப்பிடாததால் அவருடைய ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். 

click me!