’ரஜினியின் ‘தர்பார்’படத்துடன் முட்டி மோத முடிவெடுத்த ‘பட்டாஸ்’தனுஷ்?...

Published : Nov 07, 2019, 10:48 AM IST
’ரஜினியின் ‘தர்பார்’படத்துடன் முட்டி மோத முடிவெடுத்த ‘பட்டாஸ்’தனுஷ்?...

சுருக்கம்

இரும்புத்திரை இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துக் கொண்டிருக்கும் படம் ஹீரோ. இப்படம் 2019 கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதே தேதியில், துரைசெந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ’பட்டாஸ்’ படமும் வெளியாகும் என்று  முதலில் சொல்லப்பட்டது.  

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தர்பார்’பட மோஷன் போஸ்டர்களை இன்று மாலை 4 மொழிகளில் 4 சூப்பர் ஸ்டார்கள் வெளியிட உள்ள நிலையில் இப்படத்துடன் தனுஷின் ‘பட்டாஸ்’படமும் பொங்கலன்றே ரிலீஸாக வாய்ப்புள்ளதாக கோடம்பாக்க வட்டாரங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன.

இரும்புத்திரை இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துக் கொண்டிருக்கும் படம் ஹீரோ. இப்படம் 2019 கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதே தேதியில், துரைசெந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ’பட்டாஸ்’ படமும் வெளியாகும் என்று  முதலில் சொல்லப்பட்டது.

இதனால் முதன்முறை தனுஷ் சிவகார்த்திகேயன் ஆகியோர் நடித்த படங்கள் நேரடியாக மோதும் சூழல் உருவானது. ஆனால் அந்த முடிவுக்கு ஒரு பேராபத்து வந்திருக்கிறது. ‘பட்டாஸ்’படத்தின் போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் தனுஷ் மற்றும் இயக்குநர் நினைத்த நேரத்தில் முடிய வாய்ப்பில்லை என்பதை சற்று தாமதமாகவே புரிந்துகொண்டார்களாம். வேறு வழி? அடுத்த பெரிய ரிலீஸ் தேதி என்றால் அது பொங்கல்தான்.

ஆனால் அதே பொங்கலன்று  ரஜினியின் தர்பார் வெளியாகவிருக்கிறது.அந்தத் தேதியில் மாமனார் ரஜினி படத்துடன் மோதுவதா? என்று தயங்கும் தனுஷை, பொங்கலுக்கு சுமார் ஒன்பது நாட்கள் வரை விடுமுறை இருக்கிறது. அதனால் இரு படங்களுமே வசூலை வாரிக்குவிக்கும். இந்த இரு படங்களும் ரிலீஸாவதாக இருந்தால் மற்றவர்கள் தங்கள் படங்களை ரிலீஸ் பண்ணத் தயங்குவார்கள் என்று கொம்பு சீவி வருகிறார்களாம். ஆக தனுஷ் பொங்கலன்று மாமனாரை முட்டத்தயாராவாரா என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?