தேன்மொழி பாடலை தத்துரூமாக பாடி அசத்தியுள்ளார் மாற்றுத்திறனாளி திருமூர்த்தி. அவரது வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது.
தனுஷ் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் திருச்சிற்றம்பலம். இந்த படத்தை யாரடி நீ மோகினி பட இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ளார். இதில் ராசி கண்ணா, நித்யா மேனன், ப்ரியா பவானி சங்கர் என மூன்று நாயகிகள் தோன்றியுள்ளனர். மூன்று ஹீரோயின்களில் யாரை இறுதியாக இவர் கரம்பிடிப்பார் என்பதே படத்தின் மைய கருவாக உள்ளது.
முன்னதாக தனுஷ் நடிப்பில் வெளியான பல படங்களும் ஓடிடியில் வெளியாகி இருந்த நிலையில் இரண்டு வருடங்களுக்கு பிறகு இந்த படம் திரைக்கு வந்துள்ளதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இறுதியில் இவர் நடிப்பில் ஹாலிவுட் படமான தி கிரே மேன் இணையதளத்தில் வெளியாகியிருந்தது. இந்த சூழலில் திருச்சிற்றம்பலம் வெளியாகி வரவேற்பு பெற்று வருகிறது. நல்ல வசூலையும் பெற்று வரும் இந்த படத்தின் பாடல்கள் முன்னதாக வெளியாகி ரசிகர்களின் மனதை ஈர்த்திருந்தது.
மேலும் செய்திகளுக்கு...வண்ண கலவையில் மின்னும் ரம்யா பாண்டியன்...ட்ரான்ஸ்பிரன்ட் சேலையில் மனதை மயக்கும் போஸ்
தங்க மகனை தொடர்ந்து பல ஆண்டுக்கு பிறகு தனுஷ் அனிருத் கூட்டணிகள் திருச்சிற்றம்பலத்தின் பாடல்கள் வெளியானதால் இணையதளத்தில் சக்கைபோடு போட்டு வருகிறது. அதிலும் தாய் கிழவி, தேன்மொழி உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டது. தேன்மொழி பாடல்களுக்கு தனுஷ் வரிகள் இயற்றி இருந்தார் சந்தோஷ் நாராயணன் குரல் கொடுத்திருந்தார். இந்த பாடல் வெளியாகி சில நாட்களிலேயே அதிகப்படியான ரீல்ஸுகள் செய்யப்பட்டதன் மூலம் பிரபலமானது. பிரபலங்கள் பலரும் இந்த பாடலுக்கு இன்ஸ்டாவில் ரீல்ஸ் செய்து பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த பாடலை தத்துரூமாக பாடி அசத்தியுள்ளார் மாற்றுத்திறனாளி திருமூர்த்தி. அவரது வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது.
மேலும் செய்திகளுக்கு... ‘பிசாசு 2’ படத்தில் ஆண்ட்ரியாவின் நிர்வாணக் காட்சி... புது விளக்கம் கொடுத்த இயக்குனர் மிஷ்கின்
♥️✨ 🔥 🔥 🔥 pic.twitter.com/CjvqDwKhLN
— Thirumoorthi (@thirumoorthi03)முன்னதாக திருமூர்த்தி கமலின் விக்ரம் படத்தில் இடம்பெற்ற பத்தல பத்தல பாடலை பாடி கவனத்தை ஈர்த்திருந்தார். இந்த பாடலை அனிருத் இசையில் கமலஹாசன் பாடியது போலவே பிளாஸ்டிக் பக்கேட்டை வாசித்து பாடியிருந்தார். இந்த வீடியோவை நெட்டிஷன்கள் ட்ரெண்டாக்கி வந்தனர். அதோடு கமலின் கவனத்திற்கும் சென்றது. இதை அடுத்து ஏ ஆர் ரகுமான் இசை பள்ளிகள் திருமூர்த்தியைபடிக்க வைப்பதாக நேரில் சந்தித்து கூறியிருந்தார் உலக நாயகன். இதை தொடர்ந்து தற்போது தனுஷின் பாடலில் திருமூர்த்தி பாடி இருக்கும் வீடியோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு... உடல் எடை கூடிய ஆலியா பட்... பேபி பம்ப் தெரியும் ட்ரான்ஸ்பரென்ட் உடையில் ரன்பீருடன் கொடுத்த லேட்டஸ்ட் போஸ்!