இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பல்வேறு இடங்களில் செட் அமைத்து நடைபெற்று வந்தது.
நடிகர் தனுஷ் தனது 44 வது படமாக சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், திருச்சிற்றம்பலம் படத்தில் நடிக்கிறார். மித்ரன் ஜவஹர் இயக்கி வரும் இந்த படத்திற்கு கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை தனுஷ் எழுதியுள்ளார். மேலும் டி.என்.ஏ. என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் தனுஷ் மற்றும் அனிருத் 6 ஆண்டுகளுக்குப் பிறகு #D44 படம் மூலமாக ஒன்றிணைந்துள்ளனர்.
இந்த படத்தில் இயக்குநர் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து தனுஷ் உடன் பிரபல நடிகைகளான ராஷி கண்ணா மற்றும் நித்யா மேனன், ப்ரியா பவானி ஷங்கர் என மூன்று நடிகைகள் முதன் முறையாக தனுஷ் உடன் நடிக்க உள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.
இதுவரை இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பல்வேறு இடங்களில் செட் அமைத்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் மேலும் இந்த படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் வரும் செப்டம்பர் 3 ஆம் தேதியில் இருந்து தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாண்டிச்சேரியில் பாடல் காட்சிகளை படமாக்கப்பட உள்ளதாகவும், அதற்கான செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.