
இயக்குனர் மணிரத்தினத்தின் துணை இயக்குனர், தனா இயக்கம் திரைப்படம் “படைவீரன்” . இந்த படத்தில் கதாநாயகனாக பாடகர் விஜய் யேசுதாஸ் நடிக்கிறார்.
மிக முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா நடித்திருக்கிறார். நாயகியாக அம்ரிதா ஐயர் அறிமுகமாகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தேனி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் நடைபெற்றது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் வேளையில் சமீபத்தில் “படைவீரன்” படத்தைப் பார்த்த தனுஷ், படத்தை வெகுவாகப் பாராட்டியதுடன், இந்த வெற்றிப் படத்தில் தன்னுடைய பங்களிப்பும் இருக்க வேண்டுமென விரும்பி ஒரு பாடலைப் பாடித் தருவதாகக் கூறி, உடனடியாக இயக்குனர் தனா, இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா, விஜய் யேசுதாஸ் மற்றும் கவிஞர் பிரியனுடன் அமர்ந்து, இசையமைப்பாளர் மற்றும் கவிஞருக்கு இயக்குனர் தனா சூழ்நிலையை விளக்கி, கார்த்திக்ராஜாவின் அருமையான டியூனுக்கு பிரியனின் வரிகளில் “ லோக்கல் சர்க்கா பாரின் சரக்கா” என்ற படு துள்ளலான பாடலைப் பாடிக் கொடுத்தார் நடிகர் தனுஷ்.
ஒரு பாடகர் நடிக்கும் படத்திற்கு ஒரு பிரபல நடிகர் பின்னணி பாடியிருப்பது இதுவே முதல் முறை. இப்பாடலுக்கான படப்பிடிப்பு விரைவில் நடைபெறுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.