
பிரபல நடிகர் தனுஷ் :
தமிழ் திரையுலகில் வாட்டசாட்டம் தேவையில்லை என நிரூபித்த நடிகர்களில் முக்கியமானவர் தனுஷ். தயாரிப்பாளர் கஸ்தூரி ராஜாவின் இளைய மகனான தனுஷ். ரஜினி விட்டு மாப்பிளையனார். தமிழ், தெலுங்கு என கலக்கி வந்த தனுஷ் பாலிவுட்டை அடுத்து கோலிவுட்டுக்கு பறந்துள்ளார். இதற்கிடையே மணவாழ்வில் பிரச்சனையை சந்தித்துள்ள தனுஷ் மாறன் படத்தை நடித்து முடித்துள்ளார்.
ஓடிடியில் வெளியான மாறன் :
தனுஷ் தற்போது துருவங்கள் பதினாறு, மாஃபியா போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் படத்தில் நடித்துள்ளார். இதில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் (Malavika Mohanan) நடித்துள்ளார். இவர்களுடன் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, போஸ் வெங்கட், கேகே, மாஸ்டர் மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மாறனை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ்குமார் (GV Prakash Kumar) இசையமைத்துள்ளார். கடந்த 11-ம் தேதி ஓடிடியில் இந்த படம் வெளியானது .
மேலும் செய்திகளுக்கு... Actor Dhanush :ஃபார்மில் இருந்த அசுரனை பாதாளத்தில் தள்ளிவிட்ட 2 கார்த்திக் - போச்சே.. போச்சேனு புலம்பும் தனுஷ்
ஓடிடியில் வெளியாகும் தனுஷ் படம் :
மாறன் படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரின் வெளியாகியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சமீபகாலமாக வெளியான தனுஷ் படம் பெரும்பாலும் ஓடிடியில் தான் வெளியாகியுள்ளது. ஜகமே தந்திரம், கலாட்டா கல்யாணம் அதோடு ஹாலிவுட் படமான க்ரே மேன் என அடுத்தடுத்து ஓடிடி சென்று விட்டது. இவ்வாறு இருக்க மாறனும் ஓடிடியில் வெளியானது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது.
மாறன் கதையம்சம் :
துணிச்சலான பத்திரிக்கையாளராக தனுஷ் நடித்துள்ள மாறன் அரசியல்வாதிகள், காவல் துறையினர் என பெரும் புள்ளிகளை இந்த படம் குறித்து நெட்டிசன்கள் தங்களுடைய கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து கொண்டு வருகின்றார்கள். இந்நிலையில் மாறன் சத்யராஜ் படத்தின் கதையை வைத்து எடுத்துள்ளதாக பேசப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு... Maaran Review : கவுத்திவிட்ட ஜகமே தந்திரம்... மாறன் மூலம் வெற்றிப்பாதைக்கு திரும்பினாரா தனுஷ்?- முழு விமர்சனம்
சத்யராஜ் மாறனின் கதை :
கடந்த 2002 -ம் ஆண்டு ஜவகர் இயக்கத்தில் வெளியான படம் ‘மாறன்’. இந்த படத்தில் சத்யராஜ், சீதா மற்றும் மணிவண்ணன் மகன் ரகுவண்ணன் நடித்து இருந்தனர். இந்த படத்தின் கதையை திருடியே மாறன் உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே கோ’, ‘ தர்பார்’ படங்களின் சாயல் இருப்பதாக சொல்லப்படும் நிலையில் சத்யராஜ் படத்தின் கதையை இயக்குனர் திருடி உள்ளதாக புதிய பூதம் கிளம்பியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.