
பட்டயை கிளப்பி தி காஷ்மீர் ஃபைல்ஸ் :
சமீபத்தில் வெளியாகி மாஸ் காட்டி வரும் தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம்.. 80களின் பிற்பகுதியிலும் 90களின் முற்பகுதியிலும் காஷ்மீர் கிளர்ச்சியை மையமாக கொண்டுள்ளது. அப்போது காஷ்மீரி பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்ட பின்னணியை தோலிருந்துள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த படத்தை விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ரஞ்சன் அக்னிஹோத்ரின் மனைவி பல்லவி ஜோஷி மற்றும் அனுபம் கெர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நேற்று முன்தினம் திரைக்கு வந்த இப்படம் விமர்சக ரீதியாக பாராட்டப்பட்டு வருகிறது.
பிரதமரின் நேரடி பாராட்டு :
ரசிகர்களை கவர்ந்து வரும் தி காஷ்மீர் ஃபைல்ஸ் காஷ்மீரில் இந்துக்கள் வெளியேறியதை அப்பட்டமாக வெளிக்காட்டிறயிருப்பதை பாராட்டியுள்ள பிரதமர் மோடி.. துணிச்சலுடன் இந்த படத்தை உருவாக்கியதற்கு இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி உள்ளிட்ட படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டி இருந்தார். பிரதமருடனான சந்திப்புக்கு பின் பேசிய இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி, "பிரதமரின், 'தி காஷ்மீர் ஃபைல்ஸ் பற்றிய பாராட்டும், உன்னதமான வார்த்தைகளும் தான் படத்தை மேலும் சிறப்புறச் செய்கிறது" என்று தெரிவித்திருந்தார்
மேலும் செய்திகளுக்கு... The Kashmir Files : காஷ்மீர் ஃபைல்ஸ் படம் பார்த்து மெர்சலான பிரதமர் மோடி - படக்குழுவை நேரில் பாராட்டினார்
படம் பார்க்க காவல்துறைக்கு விடுமுறை :
பிரதமரின் பாராட்டை தொடர்ந்து மத்திய பிரதேச அரசு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. முன்னதாக கேளிக்கை வரியில் இருந்து இந்த படத்துக்கு விலக்கு அளிப்பதாக அம்மாநில முதல்வர் மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்திருந்திருந்தார். இந்நிலையில் “தி காஷ்மீர் ஃபைல்ஸ்” திரைப்படத்தைப் பார்ப்பதற்காக மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள போலீசாருக்கு விடுமுறை அளிக்கப்படும் என்றும் அம்மாநில அறிவித்துள்ளது.
அதிரடி கேள்விகளை தொடுக்கும் கங்கனா ரணாவத் :
"தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் தொடர்பாக நடிகை கங்கனா ரணாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். பிரதமர் மோடி பாராட்டிய "தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் குறித்து பாலிவுட் வட்டாரங்களில் நிலவும் மயான அமைதியை கவனியுங்கள். இந்தப் படம் ஒவ்வொரு கட்டுக்கதையையும் உடைத்துள்ளது. இந்த வருடத்தின் வெற்றிகரமான மற்றும் லாபம் ஈட்டும் படமாக இருக்கும்.
இந்தப் படத்துக்கு எந்த மலிவான விளம்பரமும் செய்யப்படவில்லை. வசூல் குறித்து எந்தவிதமான போலி கணக்குகளும் வெளியாகவில்லை. தேச விரோத மாஃபியாக்களின் செயல்திட்டங்கள் இல்லை. ஆனாலும் பாலிவுட் இந்தப் படம் குறித்து அமைதியை கடைபிடிப்பது ஏன் என தெரியவில்லை. நாடு மாறும் போது படங்களும் மாறும்" என அதிரடி வார்த்தைகளை குவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.