
தமிழ் சினிமாவின் அறிமுகமாகும் போது, பல்வேறு விமர்சனங்களை பெற்ற தனுஷ், இன்று பலரும் ஆச்சர்யப்படும் படி, பாலிவுட், ஹாலிவுட் என அசுர வளர்ச்சியில் சென்று கொண்டிருக்கிறார். இவர் தன்னுடைய மனைவிக்காக பாடல் ஒன்றை டெடிகேட் செய்து, ரொமான்ஸ் செய்யும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
அசுரத்தனமான நடிப்பை தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் வெளிப்படுத்தி வருபவர் தனுஷ். இவருடைய நடிப்பிற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக சமீபத்தில், 'அசுரன்' படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார், மேலும் அவரது 'கர்ணன்' நல்ல விமர்சனங்களைப் பெற்றது மட்டுமல்லாமல், பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது.
நடிப்பை தாண்டி, பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், மற்றும் தயாரிப்பாளர் என பிஸியாகவே வளம் வருகிறார். அதே போல் ஒரு ஹாலிவுட் திரைப்படத்தில் முழு நீள பாத்திரத்தில் நடித்த முதல் தமிழ் நட்சத்திரம் என்ற பெருமையைப் பெறுகிறார். அவர் தற்போது ருஸ்ஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் 'தி கிரே மேன்' படத்திற்காக அமெரிக்காவில் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார்.
என்னதான் பட வேளைகளில் பிசியாக இருந்தாலும், தன்னுடைய குடும்பத்துடன் நேரம் செலவிடவும் அவர் மறந்து இல்லை. அந்த வகையில், தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவிற்க்காக ரொமான்டிக் பாடல் ஒன்றை பாடி ரொமான்ஸ் செய்யும் அழகான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 'பேட்ட' படத்தில் இடம்பெற்ற சூப்பர் 'இளமை திருப்புதே ' பாடி தான் ரொமான்ஸ் செய்துள்ளார். சினிமாவை மிஞ்சும் இந்த ரியல் லைப் ஜோடியின்... ரொமான்டிக் வீடியோ இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.