ரசிகர்களுக்கு ஹாய் சொல்லிக்கொண்டே... ஜாலியாக ஜாக்கிங் போகும் தனுஷ்! வைரலாகும் வீடியோ!

Published : Jun 05, 2023, 11:13 PM IST
ரசிகர்களுக்கு ஹாய் சொல்லிக்கொண்டே... ஜாலியாக ஜாக்கிங் போகும் தனுஷ்! வைரலாகும் வீடியோ!

சுருக்கம்

நடிகர் தனுஷ் ஜாலியாக ரோட்டில் ஜாக்கிங் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.  

தமிழ் சினிமாவை தாண்டி, பாலிவுட், ஹாலிவுட், என தன்னுடைய திறமையான நடிப்பால் உலக அளவில் கலக்கி வருபவர் தனுஷ். தற்போது இவர், இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். பீரியாடிக் கதையாம்சத்தை கொண்ட இந்த திரைப்படத்தை, சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்ட பொருட்கள் செலவில் தயாரித்து வருகிறது.

பிரம்மாண்டத்தின் உச்சம்..! பிரபாஸுக்கு 50 அடி கட்டவுட்.. பிரமிக்க வைக்கும் 'ஆதிபுருஷ்' ப்ரீ-ரிலீஸ் ஏற்பாடுகள்!

தனுசுக்கு ஜோடியாக, டாக்டர், டான், எதற்கும் துணிந்தவன், போன்ற ஹிட் படங்களில் நடித்த நடிகை பிரியங்கா மோகன் நடித்த வருகிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் சந்தீப் கிஷன், சிவராஜ் குமார், உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் இணைத்து நடித்து வருகிறது. தனுஷ் இதுவரை நடித்திராத மிகவும் வித்தியாசமான கெட்டப்பில் நடித்துவரும் 'கேப்டன் மில்லர் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

சீரியல் நடிகை காவ்யா அறிவுமணியின் கவர்ச்சி களோபரம்!

அடர்ந்த காட்டு பகுதிகள், மற்றும் கிராமப்புறங்களில் எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு, மதுரையில் உள்ள... கிராம பகுதியில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தனுஷ் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து... காலையிலேயே, அந்த கிராமத்தில் இருக்கும் சாலை ஒன்றில் ஜாலியாக... தன்னை ஆச்சர்யமாக பார்க்கும் ரசிகர்களுக்கு ஹாய் சொல்லிக்கொண்டே ஜாலியாக ஜாக்கிங் செய்துள்ளார். முன்னணி நடிகராக இருந்தாலும் தனுஷ், மிகவும் எளிமையாக ஜாக்கிங் செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?