
‘அசுரன்’, ‘கர்ணன்’, ‘ஜகமே தந்திரம்’ என தனுஷ் நடிப்பில் வெளியான படங்கள் அடுத்தடுத்து சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து வருகிறது. இதன் மூலம் பாலிவுட்டில் கால் பதித்த தனுஷ், ஹாலிவுட்டிலும் தடம் பதித்து விட்டார். ‘அவெஞ்சர்ஸ்’ பட இயக்குநர்களான ஆந்தோனி ரூஸோ மற்றும் ஜோயி ரூஸோ சகோதரர்கள் இயக்கி வரும் ‘தி கிரே மேன்’ ஹாலிவுட் படத்தில் நடித்து முடித்த தனுஷ், தற்போது தமிழில் அடுத்தடுத்து காமிட்டாகியுள்ள படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய கையோடு கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் D43 பட ஷூட்டிங்கில் தனுஷ் பங்கேற்று வருகிறார். ஐதராபாத்தில் நடந்து வரும் இதன் படப்பிடிப்பில் மாளவிகா மோகனன், மாஸ்டர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வரும் இந்த படத்திற்கு, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
இதுவரை படத்திற்கு தலைப்பிடப்படாமல் இருந்து வந்த நிலையில், தனுஷ் பிறந்தநாளான இன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. #D43 படத்திற்கு தற்போது ‘மாறன்’ என பெயரிடபட்டுள்ளது. கையில் பேனாவுடன் ஆக்ரோஷ பார்வை அனல் தெறிக்க தனுஷ், ஆக்ஷனில் தூள் கிளப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறத். இதனையடுத்து #D43FirstLook என்ற ஹேஷ்டேக் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.