கிரேக்க மன்னனாக மாறிய தனுஷ்..! வைரலாகும் வித்தியாசமான காமன் டிபி!

Published : Jul 28, 2021, 10:29 AM IST
கிரேக்க மன்னனாக மாறிய தனுஷ்..! வைரலாகும் வித்தியாசமான காமன் டிபி!

சுருக்கம்

நடிகர் தனுஷ் இன்று தன்னுடைய 38 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், இவரது பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக தயாரிப்பாளர் தாணு வெளியிட்டுள்ள வித்தியாசமான காமன் டிபி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.  

நடிகர் தனுஷ் இன்று தன்னுடைய 38 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், இவரது பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக தயாரிப்பாளர் தாணு வெளியிட்டுள்ள வித்தியாசமான காமன் டிபி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சினிமாவில் அறிமுகமாகும் போது, பல நடிகர்கள் எதிர்மறையான விமர்சனங்களை தான் சினிமா வட்டாரத்திலும், மக்கள் மத்தியிலும் பெறுகிறார்கள். இதையெல்லாம் தாங்கி கொண்டு, தன்னுடைய கடின உழைப்பால் உயரும் நடிகர்களை எப்போதுமே ரசிகர்கள் கொண்டாடவும் மறந்தது இல்லை. அந்த வகையில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் போது, பல்வேறு விமர்சனங்களை பெற்ற தனுஷ், இன்று பலரும் ஆச்சர்யப்படும் படி, தமிழ் திரையுலகை தாண்டி பாலிவுட், ஹாலிவுட் என அசுர வளர்ச்சியில் சென்று கொண்டிருக்கிறார். 

தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் இவரது நடிப்பு திறமையை வித்தியாசமாக வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக கடந்த ஆண்டு வெளியான அசுரன், மற்றும் கர்ணன் ஆகிய படங்களில் இவரது நடிப்பை புகழ்ந்து தல்லாதவர்களே இல்லை. அந்த அளவிற்கு யதார்த்தமாகவும், முதிர்ச்சியாகவும் நடிப்பை வெளிப்படுத்தியதற்கு 'அசுரன்' படத்திற்காக தேசிய விருதையும் பெற்றார். அதே போல் 'கர்ணன்' படத்திற்கும் தேசிய விருது தனுஷுக்கு கிடைக்கும் என்பதும் பலரது எதிர்பார்ப்பு.

நடிப்பை தாண்டி, பின்னணி பாடகர், பாடல் எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குனர் என திரையுலகில் பல்வேறு பரிமாணங்களில் தன்னுடைய திறமையை நிரூபித்து வெற்றியும் கண்டுள்ளார். இந்நிலையில் தனுஷ் இன்று தன்னுடைய 38 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், கிரேக்க மன்னார் போல் வித்தியாசமான தோற்றத்தில் தயாரிப்பாளர் தாணு வெளியிட்டுள்ள காமன் டிபி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. அதில் தனுஷ் கழுத்தில் ருத்ராச்சம் அணிந்துள்ளது போன்றும், அவருக்கு சிறகுகள் உள்ளது போன்றும் உள்ளது. மேலும் அவர் பெற்றுள்ள விருதுகளின் பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'கையெடுத்து கும்புடுறேன்;இப்படி செய்யாதீர்கள்' - ஸ்ரீலீலா மனம் திறந்து வேண்டுகோள்!
9-ல் 8 படங்கள் தோல்வி.. பான் இந்தியா ஸ்டார் தான் கடைசி நம்பிக்கை!