மீண்டும் இணைந்த "கொலவெறி" கூட்டணி.... நாளைக்கு வெடிக்கப் போகுது பாருங்க தனுஷின் அசல் "பட்டாஸ்"....!

Published : Dec 24, 2019, 12:31 PM ISTUpdated : Dec 24, 2019, 12:34 PM IST
மீண்டும் இணைந்த "கொலவெறி" கூட்டணி.... நாளைக்கு வெடிக்கப் போகுது பாருங்க தனுஷின் அசல் "பட்டாஸ்"....!

சுருக்கம்

DNA காம்பினேஷனை மீண்டும் பார்க்கப்போறோம் என்ற மகிழ்ச்சியில் துள்ளி குதித்த ரசிகர்களுக்கு, இன்று "பட்டாஸ்" படம் குறித்து வெளியான அதிரடி தகவல் டபுள் ட்ரீட்டாக அமைந்துள்ளது. 

தனுஷ் - அனிருத் வெற்றி கூட்டணி சேர்ந்து தமிழ் சினிமாவில் பல சாதனைகளை செய்துள்ளனர். அனிருத் இசையில் தனுஷ் பாடிய "கொலவெறி" பாடல் பட்டி, தொட்டி எல்லாம் தாண்டி ஃபாரின் வரை செம்ம ஹிட்டானது. சிவகார்த்திகேயன், தனுஷ் இடையே ஏதோ பிரச்சனை ஏற்பட்டதாகவும், அப்போது சிவகார்த்திகேயனுக்கு சப்போர்ட் செய்ததால் தனுஷ் அவரிடம் இருந்து விலகியதாகவும் விதவிதமான தகவல்கள் கோலிவுட்டை வட்டமிட்டு வந்தன. 

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் படி, #Askaniruth என்ற ஹேஷ்டேக்கில் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அனிருத் "விரைவில் இணைவோம்" என்று கூறியிருந்தார். DNA காம்பினேஷனை மீண்டும் பார்க்கப்போறோம் என்ற மகிழ்ச்சியில் துள்ளி குதித்த ரசிகர்களுக்கு, இன்று "பட்டாஸ்" படம் குறித்து வெளியான அதிரடி தகவல் டபுள் ட்ரீட்டாக அமைந்துள்ளது. 

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள "பட்டாஸ்" திரைப்படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வர உள்ளது. இதில் சினேகா, மெஹரீன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான "ச்சில் ப்ரோ", "முரட்டு தமிழன் டா" ஆகிய பாடல்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரலானது. 

இந்நிலையில் "பட்டாஸ்" படத்தில் மாஸ் பாடல் ஒன்றை அனிருத் பாடியுள்ளாராம். "பட்டாஸ்" படத்தின் 3வது பாடலான அதை நாளை வெளியிட உள்ளதாக தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தனுஷ்-அனிருத் கூட்டணியில் வெளியாக உள்ள அந்த பாடலை கேட்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

MGR vs TMS : எம்ஜிஆர் - டி.எம்.எஸ் மோதலால் எஸ்பிபிக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு... தமிழ் சினிமாவை அதிரவைத்த சம்பவம்!
Siragadikka Aasai : ரேகாவின் தந்தைக்கு ஹார்ட் அட்டாக்.... சீதாவுக்கு வந்த டவுட்; சிந்தாமணியின் சதி அம்பலமாகுமா?