நடிகர் தனுஷ் தன்னுடையன் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடித்து வரும் 'நானே வருவேன்' திரைப்படத்தி டீசர் தற்போது வெளியாகி தனுஷ் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
தனுஷ் நடிப்பில், சமீபத்தில் வெளியாகி சக்க போடு போட்டு வரும் 'திருச்சிற்றம்பலம்', இதுவரை தனுஷ் நடித்து வெளியான படங்கள் செய்யாத அளவுக்கு வசூல் சாதனை படைத்துள்ளது, படக்குழுவினரை உச்ச கட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், விரைவில் தனுஷ் தன்னுடைய சகோதரர் செல்வராகவன் இயக்கத்தில், இரட்டை வேடத்தில் நடித்துள்ள 'நானே வருவேன்' திரைப்படம் வெளியாக உள்ளது. இதுகுறித்த தகவலை ஏற்கனவே படக்குழு வெளியிட்ட நிலையில், தற்போது 'நானே வருவேன்' டீசர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் தனுஷ் ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
மிகவும் சைலெண்டான தனுஷ் ஒரு பக்கம் தன்னுடைய குடும்பத்தை அன்பாக பார்த்து கொள்வதையும் மற்றொரு தனுஷ், சிங்கிளாக தனக்கு பிடித்தது போல் வாழ்க்கையை வாழ்த்து வருவதையும் காட்டியுள்ளார் இயக்குனர். பின்னர் நல்லவராக இருக்கும் தனுஷுக்கும், கெட்டவராக இருக்கும் தனுஷுக்கும் என்ன பிரச்சனை ஏற்படுகிறது? இருவரும் சகோதரரர்களா? இவர்களுக்கு இடையே செல்வராகவன் ஏன் வருகிறார் பற்றி பரபரப்பு குறையாமல் இயக்கியுள்ளார் செல்வராகவன்.
யுவன் சங்கர் ராஜா இசை டீஸரிலேயே ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த படத்தில் எல்லி அவ்ரம், இந்துஜா ரவிச்சந்திரன், ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். யோகி பாபு காமெடி கதாபாத்திரத்தில் மட்டும் இன்றி முக்கிய ரோலில் நடித்துள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், பிரசன்னா படத்தொகுப்பில் இப்படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. செப்டம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியாக உள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்க எதிர்பார்ப்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
தற்போது வெளியாகியுள்ள 'நானே வருவேன்' டீசர்...