
நடிகர் ரஜினிகாந்த்தின் இரண்டாவது மகளும் இயக்குநருமான சௌந்தர்யாவின் மகன் வேத் கிருஷ்ணாவின் மூன்றாவது பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா கணவரை பிரிந்த பிறகு பெற்றோருடன் தங்கியுள்ளார். அவரின் மகன் வேத் கிருஷ்ணாவின் 3-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. அமெரிக்கா சென்றிருந்த ரஜினி பேரனின் பிறந்தநாளுக்கு சரியாக ஊர் திரும்பியுள்ளார்.
வேத் கிருஷ்ணாவின் பிறந்தநாள் பார்ட்டியில் பெரியப்பா தனுஷ், பெரியம்மா ஐஸ்வர்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தனுஷ் வேத் கிருஷ்ணாவுடன் செல்லம் கொஞ்சும் புகைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
குட்டிப் பையனுக்கு பஸ் வடிவில் கேக் செய்து வைத்திருந்தனர். பேரன் கேக் மீதிருந்த மெழுகுவர்த்தியை ஊதி அணைத்ததை பார்த்து ரஜினி மகிழ்ந்தார். தனது மகன் பிறந்தநாள் குறித்து ட்விட்டரில் செளந்தர்யா, மூன்று வருடங்களுக்கு முன்பாக என் வாழ்க்கைகுள் வந்த ஏஞ்சல். என்னுடைய அதிசயம் என் குழந்தை வேத் கிருஷ்ணா என்று குறிப்பிட்டுள்ளார். மகனின் முகத்தை வெளியுலகிற்கு காட்டாமல் வைத்திருந்த சௌந்தர்யா தற்போது காண்பித்துள்ளார்.
கிருஷ்ணாவின் பிறந்தநாள் பார்ட்டியில், இசையமைப்பாளர் அனிருத் அக்கா மகனின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டுள்ளார். சில வருடங்களாகவே தனுஷூம் அனிருத்தும் சந்தித்துக் கொள்ளாமல இருந்த நிலையில், வேத் கிருஷ்ணாவின் பிறந்த நாள் விழாவில் இருவரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் இருவரும் கலந்து கொண்டிருப்பது பலவித சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.