
வானமே எல்லை படம்மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் கொடுத்தவர் காமெடி நடிகர் தாமு, ரஜினி, விஜய், விக்ரம், என பல முன்னனி நடிகர்களுடன் 100கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
மேலும் பல மாயக்குரலில் பேசுவதில் மன்னன், தற்போது சொந்தமாக பல மேடை நிகழ்ச்சிகள் நடத்துவதில் பிஸியாக இருப்பதால் அதிகமான திரைப்படங்களில் நடிப்பது இல்லை.
இந்நிலையில் தன்னுடைய கலை நிகழ்ச்சியை முடித்து விட்டு கடந்த 9ம் தேதி, 8.45 மணிக்கு சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் பெங்களூரிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக அவர் கண்ணில் பட்ட ஒரு காட்சி... என்னவென்றால், அவர் பயணம் செய்த C1 coach ல் அதிக வோல்டேஜ் மின்சாரம் பாயும் இணைப்புகள் திறந்தபடியே இருந்துள்ளது, அதனை பார்த்த இவர் ரயில் ஊழியர்களான மெக்கானிக், பொறுப்பாளர்கள் போன்றவர்களை தேடியபோது அங்கு யாரும் இருந்ததாக தெரியவில்லை.
இதனை தொடர்ந்து அங்கிருந்த மற்ற சிலநபர்களிடம் கேட்ட போது அதனை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவும் இல்லை சரியான பதில் கொடுக்கவில்லை என வேதனையோடு கூறியுள்ளார்.
மேலும் இதன்மூலம் பயணிகளுக்கு எந்த ஒரு அசம்பாவிதமும் நடைப்பெறாமல் தடுக்க உடனடியாக ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கெஞ்சிக் கேட்டுக்கொள்வதாக தாமு கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.