குடும்பத்துடன் சொந்த ஊரில் பொங்கல் கொண்டாடிய நடிகை தேவயானி… கிராம மக்களுக்கு பொங்கல் வழங்கி மகிழ்ச்சி !!

By Selvanayagam PFirst Published Jan 14, 2019, 1:29 PM IST
Highlights

நடிகை தேவயானி அவரது கணவர் ராஜ்குமார் ஆகியோர் தங்களது குழந்தைகளுடன் ஈரோடு மாவட்டத்தில்  உள்ள தங்களது சொந்த ஊரில் பொங்கல்  விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். அந்த கிராமத்தில் உள்ள அனைவருக்கும் நடிகை தேவயானி பொங்கல் கொடுத்து மகிழ்ந்தார். மும்பையை பூர்வீகமாக கொண்டாலும் தற்போது அவர் முற்றிலும் தமிழ் பெண்ணாக மாறியிருப்பதை அப்பகுதி மக்கள் பார்த்து வியந்ததுடன் அவரை பாராட்டி வருகின்றனர்.

நடிகை தேவயானி மும்பையை பூர்வீகமாக் கொண்டவர். தமிழில் காதல் கோட்டை, சூர்யவம்வம், நீ வருவாய் என 75 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தார். சின்னத் திரையிலும் வெற்றி நாயகியாக வலம் வந்தார்.

இவ்ர் விண்ணுக்கும், மண்ணுக்கும் என்ற படத்தை இயக்கிய  ராஜகுமாரனை காதலித்து வந்தார். தாய் தந்தையரின் எதிர்ப்பை  மீறி நடிகை தேவயானி ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.

ராஜகுமாரனுக்கு சொந்த ஊர் ஈரோடு மாவட்டம்  அந்தியூர் அருகில் உள்ள ஆலயங்கரடு கிராமம். இந்த தம்பதிகள் சென்னையில் வசித்து வந்தாலும் மாதம் ஒரு முறை தங்களது சொந்த ஊருக்கு சென்று வருவது வழக்கம். தீபாவளி, பொங்கல் மற்றும் அந்த ஊரில் நடக்கும் திருவிழா போன்ற சமயங்களில் குடும்பத்துடன் அங்கு சென்று  கொண்டாடுவது வழக்கம்.

அது மட்டுமல்லாமல் நடிகை தேவயானி அங்கு  நிலம் வாங்கி விவசாயமும்  செய்து வருகிறார். கடந்த ஆண்டு அவரது பண்ணையை ஒட்டி  உள்ள நிலங்களை சிலர் பிளாட் போட்டு விற்க முயன்றபோது அதை தானே  விலைக்கு வாங்கி அதிலும் விவசாயம் செய்து வருகிறார். அந்த அளவுக்கு விவசாயத்தையும் அந்த மண்ணையும் நடிகை தேவயானி நேசித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை தேவயானி, ராஜகுமாரன் ஆகியோர் தங்களது குழந்தைகளுடன் சொந்த ஊருக்கு வந்தனர். அவர்களது பண்ணை வீட்டின் முன்பு மண் பானையில் பொங்கல் வைத்து குடும்பத்தினருடன் வழிபட்டார். மேலும் அந்த கிராமத்து மக்களுக்கும் பொங்கல் கொடுத்து மகிழ்ந்தார்.

நடினை தேவயானி மும்பையை பூர்வீகமாக கொண்டாலும் ஒரு தமிழ் இயக்குநரை மணந்து, முற்றிலும் தமிழச்சியாகவே மாறிவிட்டார். அவர் அந்த ஈரோடு மண்ணையும், மக்களையும், விவசாயத்தையும் நேசித்து வருவதை அப்பகுதி மக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.

click me!