மாரடைப்பால் சிகிச்சை பெரும் விவேக்..! துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் உருக்கமான பதிவு!

Published : Apr 16, 2021, 01:56 PM ISTUpdated : Apr 16, 2021, 02:05 PM IST
மாரடைப்பால் சிகிச்சை பெரும் விவேக்..! துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம்  உருக்கமான பதிவு!

சுருக்கம்

மாரடைப்பு காரணமாகா, காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், நடிகர் விவேக் விரையில் நலம் பெற்று, வீடு திரும்ப வேண்டும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், ட்விட்டர்  மூலம் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.  

மாரடைப்பு காரணமாகா, காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், நடிகர் விவேக் விரையில் நலம் பெற்று, வீடு திரும்ப வேண்டும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், ட்விட்டர்  மூலம் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

காமெடியில் கூட, சமூக கருத்துக்களை புகுத்தி அனைவரையும் சிரிக்க வைப்பவர், நடிகர் விவேக். மேலும் ரசிகர்களால் சின்ன கலைவாணர் என அன்புடன் அழைக்கப்பட்டு வருகிறார். சினிமாவை தாண்டி, அப்துல் கலாமின் மரம் நடும் சமூக சேவையை தொடர்ந்து செய்து வருகிறார். இந்நிலையில் இவர் தன்னுடைய குடும்பத்தினருடன் அமர்ந்து, பேசி கொண்டிருந்த போது, திடீர் என மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து உடனடியாக அவரது குடும்பத்தினர், சென்னை வடபழனியில் உள்ள பிரபல  தனியார்  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரை அனுமதினர்.

மேலும் செய்தி தொடர்பாளர் நிகில் முருகன், நடிகர் விவேக் உடல் நிலை சீராக உள்ளதாகவும், ரசிகர்கள் பயம் கொள்ள வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளம் மூலம் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர், தொடர்ந்து விவேக் விரைவில் உடல் நலம் பெற்று வர வேண்டும் என தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில்... துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ட்விட்டர் மூலம் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது... மாரடைப்பு காரணமாக இன்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அன்புச் சகோதரர் நடிகர் திரு.விவேக்  அவர்கள் விரைவில் பூரண நலம்பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். என தெரிவித்துள்ளார்.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நிவேதா பெத்துராஜ் - ரஜித் திருமணம் நிறுத்தம்? இன்ஸ்டாவில் போட்டோஸை நீக்கியதால் டவுட்டோ டவுட்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஹைலைட்ஸ்: ராஜீ முதல் தங்கமயில் வரை இன்றைய அப்டேட்ஸ்!