
தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில், நடிகர் விவேக் நேற்று அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டார். கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும் தொற்று வரும் ஆனால் உயிரிழப்புகளை தடுக்கும் என்பதால் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்.
இந்நிலையில் இன்று காலை நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து சென்னையில் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். வரும் போதே அவர் மயக்க நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த செய்தியை அறிந்த திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் விவேக் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டுமென பிரார்த்தித்து வருகின்றனர்.
வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு அழைத்து வரும் போதே விவேக்கிற்கு கடுமையான மூச்சுத்திணறல் இருந்தது. எனவே ஐ.சி.யூ.வில் அனுமதிக்கப்பட்டுள்ள விவேக்கிற்கு எக்மோ கருவிகளை பொருத்தி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விவேக்கின் இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை சீராக்குவதற்காக எக்மோ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து நடிகர் விவேக்கிற்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.