நடிகர் விவேக்கிற்கு ஆஞ்சியோ அறுவை சிகிச்சை.. மருத்துவக் குழு முடிவு.. சுயநினைவோடு இருக்கிறார்.?

Published : Apr 16, 2021, 01:52 PM IST
நடிகர் விவேக்கிற்கு ஆஞ்சியோ அறுவை சிகிச்சை.. மருத்துவக் குழு முடிவு.. சுயநினைவோடு இருக்கிறார்.?

சுருக்கம்

ஆனால் உயிரிழப்பு ஏற்படாது, நமது மருத்துவர்கள் செவிலியர்கள் மிகவும் திறமையானவர்கள் எனக் கூறியிருந்தார். இந்நிலையில் அவருக்கு இன்று காலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

நடிகர் விவேக்கிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ள நிலைகள் அவருக்கு ஆஞ்சியோ அறுவை சிகிச்சை செய்ய மருத்துவ குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது அவர் சுயநினைவோடு உள்ளார் எனவும் அவரது மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் கூறியுள்ளார். தன்னுடைய நடிப்பால், நகைச்சுவையால் தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் விவேக். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நடித்து வரும் அவர், நடிகர் என்பதையும் தாண்டி சமூக சேவைகளிலும், கொரோனா உள்ளிட்ட பல்வேறு நெருக்கடி நேரங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் ஈடுபட்டு வருகிறார். 

இந்நிலையில் நேற்று ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் உடன் இணைந்து தடுப்பூசி போட்டுக் கொண்டதுடன், தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிலையில் நடிகர் விவேக் இன்று காலை சினிமா படப்பிடிப்பு ஒன்றில் ஈடுபட்டிருந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு  ஏற்பட்டது, உடனே அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று ஒமந்தூரார் தோட்டத்தில் கொரோடா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின்னர்  செய்தியாளர்களை சந்தித்த அவர், அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளவேண்டும், தடுப்பூசி குறித்து எவ்வித அச்சமும் தேவையில்லை, தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின்னரும் கொரோனா வர வாய்ப்பு உள்ளது. 

ஆனால் உயிரிழப்பு ஏற்படாது, நமது மருத்துவர்கள் செவிலியர்கள் மிகவும் திறமையானவர்கள் எனக் கூறியிருந்தார். இந்நிலையில் அவருக்கு இன்று காலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தமிழ் திரையுலகில் மட்டுமல்ல, அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து தகவல் தெரிவித்துள்ள அவரது மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன், குடும்பத்தினருடன் வீட்டில் பேசிக் கொண்டிருக்கும்போது நடிகர் விவேக் மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பரிசோதனை முடிவில் ஆஞ்சியோ  சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தொற்போது சுயநினைவோடு உள்ளார் என தெரிவித்துள்ளார். 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?