
ஜிமிக்கி கம்மல் வைரலானது போல டெல்லியைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர் மலையாளப் பாடலுக்கு உற்சாக நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை மலையாள நடிகர் நிவின் பாலி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பாதிரியார் ஜெபிப்பார், இறைத் தொண்டிலேயே முழு நேரத்தையும் செலுத்திக் கொண்டிருப்பவர்கள் என்பதை உடைத்து, மனம் போன போக்கில் தன்னியல்பாக நடனம் ஆடிய பாதிரியார் ஒருவரின் வீடியோ இணையத்தையே புரட்டி போட்டு வருகிறது.
மலையாள நடிகர் நிவின் பாலி - நயன்தாரா நடித்திருந்த லவ்-ஆக்ஷன் -டிராமா படத்தில் குடுக்கு பட்டிய குப்பாயம் என்கிற பாடல் இடம் பெற்றுள்ளது. இந்தப்பாடலுக்கு மேத்யூ கிளிக்கெச்சிரா பாதிரியார், டெல்லியின் நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்றின்போது நடனமாடியுள்ளார். அவரது உற்சாகமான நடனமே, இந்த வீடியோ வைரலாகி வருவதற்குக் காரணமாக அமைந்துள்ளது. முன்னதாக மலையாளத்தில் வெளியான ஜிமிக்கி கம்மல் பாடல் பிரபலமானதை அடுத்து பலரும் அந்த பாடலுக்கு நடனமாடியதால் அப்பாடல் வைரல் ஹிட் ஆனது. இந்த வரிசையில் தற்போது இந்த பாடலும் துள்ளலாக இருப்பதால் ஹிட் அடித்து வருகிறது.இந்த வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.