
விஜய் சேதுபதி நடிகர் சிரஞ்சீவியின் காலில் விழுந்து வணங்கும் காணொளி ஒன்று வலைதளங்களால் வைரலாக்கப்பட்டு,’இதுதான் பகுத்தறிவா, அவருக்கும் பசிக்கும்ல,...ஆந்திரா மீல்ஸ்க்கு ஆசைப்படுறாருய்யா...போன்ற கமெண்டுகள் போடப்பட்டு வருகின்றன.
துவக்கத்தில் தமிழ்ப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த விஜய் சேதுபதி தற்போது தெலுங்கு, மலையாளம்,இந்திப்படங்களிலும் நடிக்கத் துவங்கியுள்ளார். விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்துள்ள நடிகர் சிரஞ்சீவியின் மெகா பட்ஜெட் படமான ‘ஷைரா நரசிம்ம ரெட்டி’ இன்னும் இரு வாரங்களில் அக்டோபர் 2ம் தேதியன்று ரிலீஸாகிறது.
இந்நிலையில் இப்படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கு நன்றி சொல்லும் நிகழ்ச்சி ஒன்றில் விஜய் சேதுபதி குறித்து மிக உயர்வாகப் பேசும் சிரஞ்சீவி, ‘அவர் எவ்வளவு பிசியான நடிகர் தெரியுமா? தமிழில் இரவு பகல் பார்க்காமல் நடித்து வருகிறார். அவர் கால்ஷீட் தேவையென்றால் பல மாதங்கள் காத்திருக்கவேண்டும். ஆனால் இந்தப்படத்துக்காக நான் நடிக்கச்சொல்லிக் கேட்டவுடன் ‘சிரஞ்சீவி அண்ணாவுக்காக’என்று சொல்லியபடி உடனே கால்ஷீட் கொடுத்தார். அவருக்கு நன்றி’என்று சிரஞ்சீவி பேசிக்கொண்டிருக்கும்போதே கூட்டத்தில் சற்று தள்ளி நிற்கும் விஜய் சேதுபதி சிரஞ்சீவியை நோக்கி சென்று அவரது காலைத் தொட்டு வணங்குகிறார்.
இந்தக் காணொளியை வைரலாக்கும் சிலர் தெலுங்குப் பட உலகில் மார்க்கெட்டைப் பிடிப்பதற்காக விஜய் சேதுபதி தன் மானத்தை விட்டு சிரஞ்சீவியின் காலைப் பிடிக்கிறார் என்று கிண்டலடிக்கிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.