ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட்டின் திருமணம் மும்பையில் நடைபெற உள்ள நிலையில், இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு விடுமுறை அளிக்க வேண்டும் என சமூக வலைத்தளத்தில் மக்கள் சிலர் கருத்து கூறி வருகிறார்கள்.
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திருமண நிகழ்வாக உள்ளது முகேஷ் அம்பானி மற்றும் நிதா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணம். இந்த திருமணத்தில் பாலிவுட் திரையுலகை சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர். அதே போல் ஹாலிவுட்டை சேர்ந்த ரிஹானா மற்றும் ஜஸ்டின் பீபர் போன்ற சர்வதேச நட்சத்திரங்களும் கலந்து கொள்கிறார்கள்.
ஆனந்த் அம்பானி திருமணத்தை முன்னிட்டு மும்பை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ள நிலையில்... திருமணம் நடைபெற உள்ள ஜூலை 12 முதல் 15-ஆம் தேதி வரை, போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து போக்குவரத்து துறை காவலர்கள் தரப்பில்... போக்குவரத்து நெரிசலை குறிக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவது ஒருபுறம் இருக்க... மும்பையில் பொது விடுமுறை அளிப்படுமா என்கிற எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
undefined
மேலும் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்தை முன்னிட்டு மும்பை போக்குவரத்து காவல்துறை, பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் (பிகேசி) மற்றும் ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டர் அருகே உள்ள முக்கிய வழித்தடங்களில் கட்டுப்பாடுகள் மற்றும் திசைதிருப்பல் குறித்து ஆலோசனை வழங்கியுள்ளது.
ஜூலை 5 ஆம் தேதி வெளியிட்ட செய்திக்குறிப்பில், மும்பை காவல்துறை, "ஜூலை 12 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டர், பிகேசி, பாந்த்ரா (இ), மும்பையில் ஒரு சமூக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏராளமானோர் அசௌகரியத்தைத் தவிர்க்க, ஜியோ உலக மாநாட்டு மையத்திற்குச் செல்லும் சாலையில் உள்ள வாகனப் போக்குவரத்தை மாற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களை அலைக்கழிக்கும் ஒரு நிகழ்வுக்கு தானே மாற்று வழி சொல்ல வேண்டும், அதை தவித்து மக்களை வழிக்கு செல்ல சொல்வதில் என்ன நியாயம். அப்படியே தவிர்க்க முடியாததாக இருந்தால் மக்கள் பாதிக்கப்படாத வண்ணம் விடுமுறை அளிக்க வேண்டும் என சமூக வலைதளத்தில் மக்கள் தங்களின் அதிருப்தியை தெரிவித்து வருகிறார்கள். காரணம், மும்பையின் முக்கிய பகுதிகளில் இப்போதே ட்ராபிக் நிரம்பி வழிவதால், உரிய நேரத்திற்கு பள்ளிகளுக்கு செல்ல முடியாமல் மாணவர்களும், வேலைகளுக்கு செல்லமுடியாமல் ஆண்களும் - பெண்களும் அவதி படுவதாக கூறப்படுகிறது.
பொது மக்களின் அன்றாடத் தேவைகளைக் காட்டிலும் தனியார் நிகழ்வுகளுக்கு முன்னுரிமை அளிப்பது குறித்து மக்கள் தங்களின் கவலைகளை வெளிப்படுத்தி வருவதால் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, என்ன மாதிரியான நடவடிக்கையை மும்பை போக்குவரத்து மாநகராட்சி எடுக்க உள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.