14 வயதில் அறிமுகம், 16 வயதில் தேசிய விருது வாங்கி 21 வயதில் இறந்த நடிகையை பற்றி தெரியுமா?

Published : Jun 10, 2025, 10:42 PM IST
Monisha Unni

சுருக்கம்

Monisha Unni : தன்னுடைய 14 வயதில் அறிமுகமான நடிகை 16 வயதில் சிறந்த இளம் நடிகைக்கான தேசிய விருது வென்று 21 வயதில் இறந்த தென்னிந்திய நடிகையை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Monisha Unni : கேரளா மாநிலம் கோழிக்கூட்டில் பிறந்து வளர்ந்தவர் நடிகை மோனிஷா உன்னி. கடந்த 1984 ஆம் ஆண்டு திரைக்கு வந்த பாவயா என்ற தமிழ் குறும்படத்தின் மூலமாக அறிமுகமானார். அப்போது அவருக்கு வயது 14. இந்தப் படத்திற்கு பிறகு மலையாள சினிமாவில் அறிமுகமானார். அப்படி அவர் நடித்து ஹிட் கொடுத்த Nakhakshathangal என்ற படத்திற்காக இளம் நடிகைக்கான தேசிய விருது வென்றார். அப்போது அவருக்கு வயது 16. சினிமாவில் அறிமுகமான 2 ஆண்டுகளில் தேசிய விருது பெறுவது என்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. ஆனால், அந்த சாதனையை மோனிஷா உன்னி கடந்த 38 ஆண்டுகளுக்கு முன்னரே படைத்துவிட்டார்.

மோனிஷாவும் அவரது சினிமா வாழ்க்கையும்

கடந்த 1986 ஆம் ஆண்டு திரைக்கு வந்த Nakhakshathangal (நக்கக்ஷதங்கள்) என்ற மலையாள படத்தின் மூலமாக மலையாள சினிமாவில் அறிமுகமான மோனிஷா உன்னி தனது முதல் மலையாள படத்திலேயே தேசிய விருது வென்றார். இந்தப் படத்தில் வினீத், சலீமா, கவியூர் பொண்ணம்மா, திலகன் ஆகியோர் பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த இளம் நடிகைக்கான தேசிய விருது வென்றார்.

அதன் பிறகு பல மலையாள படங்களில் நடித்தார். அதோடு, பூக்கள் விடும் தூது, திராவிடன், உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன், மூன்றாவது கண் ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அதோடு மோனிஷா உன்னியின் எல்லா படங்களுமே பெரும்பாலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றன. உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன் படத்தில் இடம் பெற்ற எல்லா பாடல்களுமே சூப்பர் ஹிட்.

மோனிஷா சென்ற கார் விபத்து

ஆனால், இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரத்தின் படி அவர் இறந்துவிடுகிறார். உண்மையில் ஒரு சில மாதங்களிலேயே அவர் உண்மையாகவே இறந்துவிடுகிறார். கடந்த 1992ஆம் ஆண்டு கேரளாவின் ஆலப்புழா செர்தலா அருகில் எக்ஸ்ரே பைபாஸ் சந்திப்பின் போது மோனிஷா மற்றும் அவரது தாயார் சென்ற வாகனம் அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மோனிஷாவின் தாயார் ஸ்ரீதேவி உன்னி லேசான காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் மோனிஷா உன்னி கழுத்து எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதுமட்டுமின்றி மோனிஷாவின் மூக்கு மற்றும் காதுகள் வழியாக இரத்தம் கசிந்துள்ளது. இதையடுத்து அவர் கேவிஎம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

அங்கம்மாள் திரைப்படம் சூப்பரா? சுமாரா? விமர்சனம் இதோ
அடிபொலியாக இருந்ததா குற்றம் புரிந்தவன் வெப் சீரிஸ்...? முழு விமர்சனம் இதோ