
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினி என்றால் அது டிடி தான். இவரின் கலகலப்பான பேச்சும், குறும்புத்தனமும் அனைவருக்கும் பிடிக்கும்.
இவர் பொதுவாகவே எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் முதல் ஆளாக வலைத்தளம் மூலம் குரல்கொடுப்பவர். சில சமயங்களில் இவருடைய கருத்துக்கள் சர்ச்சையாகவும் மாறியுள்ளது.
இந்நிலையில் இவருடைய ட்விட்டர் பக்கத்தை போலவே, போலியான ஒரு ட்விட்டர் கணக்கு உருவாக்கி அதில் டிடி யை போலவே ஒருவர் தொடர்ந்து பதிவுகளை போட்டுக்கொண்டிருக்கிறார். இது குறித்து பல முறை டிடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தாலும் அது சரியாக ரசிகர்களிடம் போய் சேரவில்லை.
தற்போது மீண்டும் இது குறித்து கூறியுள்ள டிடி, தயவு செய்து நான் சொல்லுவதை கேளுங்கள், நீல கலரில் டிக் போட்டிருக்கும் ஒரு ட்விட்டர் பகுதி என்னுடைய பெயரில் உலா வருகிறது அது நான் இல்லை என ரசிகர்களிடம் கெஞ்சுவது போல் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.