
பிரபல தொகுப்பாளினி, 'டிடி' தான் காதலித்து கரம் பிடித்த கணவர் ஸ்ரீகாந்தை விவாகரத்து செய்ய உள்ளதாக பல நாட்களாக பல்வேறு ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி கொண்டு இருக்கிறது.
இதனை உறுதி படுத்தும் விதமாக, சமீபத்தில் டிடி நடித்து வெளியான 'ப.பாண்டி' படத்தில் 'திருமதி' என்று தன்னை குறிப்பிடாமல் 'செல்வி' என்று குறிப்பிட்டு தன்னுடைய விவகாரத்தை உறுதி செய்தார் 'டிடி'.
பல ஊடகங்கள் ஏன்? செல்வி என்று குறிப்பிட்டீர்கள் என அவரிடம் கேள்வி எழுப்பியதற்கு அதை மட்டும் தயவு செய்து கேட்க வேண்டாம் என மிகவும் கறாராக கூறிவிட்டார்.
இந்நிலையில் ஏன் அவரது கணவரை விட்டு டிடி பிரிகிறார் என தகவல் வெளியாகியுள்ளது, தற்போது 34 வயதை தொட்டு விட்டதால் அவருடைய மாமியார் வீட்டில் குழந்தை பெற்று கொள்ளும் படி வற்புறுத்தியுள்ளார்களாம்.
ஆனால் முன்னணி தொகுப்பாளினியாக உள்ளதால் தன்னால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என கூறியுள்ளார் இப்படித்தான் மெதுவாக ஆரம்பித்து பிரச்சனை.
பின்னர் டிடி அதிக ஆண் நண்பர்களுடன் பழகுவதும் வெளியில் செல்வதும் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லையாம், மேலும் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல, சுசி லீக்ஸ்களிலும் டிடி சிக்கியதால் பிரச்சனை பெரிதாகி தற்போது விவகாரத்தில் வந்து நிற்பதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.