
David Warner Acted in Robinhood : நிதினோட ராபின் ஹுட் படத்துல வெங்கீ குடுமுலா டைரக்ஷன்ல மைத்ரி மூவிஸ் தயாரிப்புல மார்ச் 28 ரிலீஸாக இருக்கு. ஜிவி பிரகாஷ் குமார் மியூசிக் பண்ணிருக்காரு. ஜிவி பிரகாஷ் தமிழ்ல ஹீரோவாவும் கலக்கிட்டு இருக்காரு. அவரோட கிங்ஸ்டன் படம் மார்ச் 7 ரிலீஸாக இருக்கு. அவங்க படத்தோட மியூசிக் டைரக்டர் நடிச்ச படம்ங்குறதால கிங்ஸ்டன் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட்க்கு வெங்கீ குடுமுலா, நிதின், மைத்ரி தயாரிப்பாளர் ரவிசங்கர் கெஸ்ட்டா போயிருக்காங்க. ப்ரீ ரிலீஸ் ஈவென்ட்ல ரவிசங்கர் ராபின் ஹுட் பத்தி சில விஷயங்கள லீக் பண்ணாரு.
சிக்கந்தர் ஜோரா ஜபீன் பாடலின் டீசர் வெளியீடு: டான்ஸ் ஆடி அசத்திய சல்மான் கான், ராஷ்மிகா மந்தனா!
மகேஷ் பாபு, இலியானா மாதிரி நிதின், ஸ்ரீலீலா
ராபின் ஹுட் படத்துல நிதின் ரொம்ப அழகா, ஸ்டைலிஷா இருக்காரு. இப்பதான் ஃபைனல் காப்பி பார்த்தேன். படம் சூப்பரா வந்திருக்கு. நிதின், ஸ்ரீலீலா ஜோடிய பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. இந்த மாதிரி ஜோடிய போக்கிரி படத்துலதான் கடைசியா பார்த்தேன். அந்த படத்துல மகேஷ் பாபு, இலியானா எவ்வளவு அழகா இருந்தாங்களோ அதே மாதிரி நிதின், ஸ்ரீலீலா ரொம்ப அழகா இருக்காங்கன்னு ரவிசங்கர் சொன்னாரு.
டேவிட் வார்னர் என்ட்ரி
நிதின் குறுக்கிட்டு சார் இது நம்ம சினிமா ஈவென்ட் இல்ல.. தயவுசெஞ்சு கிங்ஸ்டன் பத்தி பேசுங்கன்னு ஜாலியா சொன்னாரு. ஆங்கர் வந்து ராபின் ஹுட் பத்தி வேற ஏதாவது லீக் பண்ணுங்கன்னு கேட்டதும் ரவிசங்கர் ஒரு சூப்பர் மேட்டர் சொன்னாரு. இந்த படத்துல டேவிட் வார்னர் சின்ன ரோல்ல வர்றதா சொன்னாரு. டேவிட் வார்னர் மாதிரி ஒரு வேர்ல்ட் கிளாஸ் கிரிக்கெட்டர் நம்ம படம் மூலமா இந்தியன் சினிமாக்கு, தெலுங்கு சினிமாக்கு வர்றது சந்தோஷமா இருக்குன்னு சொன்னாரு.
சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க ராஷ்மிகா மறுப்பு? பாடம் புகட்ட விரும்பிய காங்கிரஸ் எம்எல்ஏ!
முன்னாடி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டனா டேவிட் வார்னர் தெலுங்கு மக்களுக்கு ரொம்ப நெருக்கமானவரு. வார்னர் அடிக்கடி சோஷியல் மீடியாவுல தெலுங்கு ஹீரோக்களோட டயலாக் சொல்லி ரீல்ஸ் பண்றத பார்த்திருக்கோம். தெலுங்கு ரசிகர்கள் வார்னர டேவிட் மாமான்னு செல்லமா கூப்பிடுவாங்க.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.