தர்பார் சிறப்புக் காட்சி..! விஜய்க்கு காட்டிய அதே கடுமை..! ரஜினி படத்துக்குமா இந்த நிலை? அதிர்ச்சியில் லைக்கா!

By Selva KathirFirst Published Jan 8, 2020, 10:42 AM IST
Highlights

தர்பார் அதிகாலை சிறப்பு காட்சிகளுக்கு தற்போது வரை தமிழக அரசு அனுமதி கொடுக்காமல் வைத்திருப்பதால் தயாரிப்பு நிறுவனமான லைக்கா கடும் டென்சனில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு பொங்கலுக்கு ரஜினியின் பேட்ட படம் வெளியான போது அதிகாலை 2 மணி முதல் சிறப்பு காட்சிகள் ஒளிபரப்ப செய்யப்பட்டன. ஒரே ஒரு காட்சிக்கு சிறப்பு அனுமதி பெற்ற நிலையில் கணக்கு இல்லாமல் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன. ஆனால் கடந்த வருடம் பிகில் வெளியான போது சிறப்பு காட்சிகளுக்கு கடிவாளம் போட்டது தமிழக அரசு. ஒரே ஒரு சிறப்புக் காட்சி என்பதில் தமிழக அரசு பிடிவாதமாக இருந்தது. இதனை ஏற்று வேறு வழியில்லாமல் அதிகாலை 4 மணி அல்லது 5 மணிக்கு சிறப்பு காட்சி வெளியானது.

இதனால் பிகில் படத்தின் தயாரிப்பாளருக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டது. இது நடிகர் விஜய் படம் என்பதால் தமிழக அரசு இப்படி ஒரு முடிவை எடுத்ததாக சொன்னார்கள். மற்ற நடிகர்களின் படங்களுக்கு தமிழக அரசு இந்த அளவிறகு கெடுபிடி காட்டாது என்றும் கூறினார்கள். அதே சமயம் பிகில் படத்தின் சிறப்பு காட்சிக்க கூட பெரும் தொகை கைமாறிய பிறகே ஓகே சொல்லப்பட்டதாகவும் பேச்சு அடிபட்டது. அதே ருசியில் தற்போது லைக்காவிடம் இருந்தும் பெரும் தொகை எதிர்பார்க்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

அந்த தொகையை கொடுத்தாலும் கூட ஒரே ஒரு அதிகாலை காட்சி என்பதில் உறுதியாக இருக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாம். மேலும் அனுமதி பெற்றுவிட்டு கூடுதல் காட்சிகளை ஒளிபரப்பினால் திரையரங்க உரிமை ரத்து என்கிற நிபந்தனை விதிக்கப்படும் என்றும் சொல்கிறார்கள். இந்த நிலையில் படம் வெளியாக ஒரு நாளே உள்ளநிலையில் பெரும்பலான ஊர்களில் சிறப்புக் காட்சிககு அனுமதி கொடுக்கப்படவில்லை. கடைசி வரை இழுத்தடித்து ஒரே ஒரு காட்சிக்கு அனுமதி கொடுத்துவிடலாம் என்பது தான் திட்டம் என்கிறார்கள்.

ஆனால் லைக்கா தரப்போ பொங்கல் வரை தினமும் காலையில் சிறப்புக் காட்சிக்கு திட்டமிட்டிருந்தாக சொல்கிறார்கள். ஆனால் அதற்கு எல்லாம் வாய்ப்பே இல்லை. படம் வெளியான நாள் மற்றும் பொங்கல் தினத்தன்று மட்டுமே சிறப்பு காட்சி என்பதில் பிடிவாதமாக இருப்பதாக பேசிக் கொள்கிறார்கள். இதே நேரத்தில் வட ஆர்காடு – தென் ஆர்காடு ஏரியாவில் தற்போது வரை தர்பார் வெளியாகும் திரையரங்குகள் இறுதி செய்யப்படவில்லையாம்.

படத்தயாரிப்பு நிறுவனம் மற்றும் விநியோகஸ்தர் தரப்பு தியேட்டர்களுக்கு போடும் புதுப்புது கண்டிசனால் அந்த ஏரியாவில் படத்தை வெளியிடுவது தற்போது வரை முடிவாகாமல் உள்ளதாம்.

click me!