மாணவர்களை விட மாடுகளுக்குத் தான் இந்தியாவில் பாதுகாப்பு அதிகம் !! தெறிக்கவிட்ட இந்தி நடிகை !!

Selvanayagam P   | others
Published : Jan 08, 2020, 10:26 AM IST
மாணவர்களை விட மாடுகளுக்குத் தான் இந்தியாவில் பாதுகாப்பு அதிகம் !! தெறிக்கவிட்ட இந்தி நடிகை !!

சுருக்கம்

இந்தியாவைப் பொறுத்தவரை, மாணவர்களை விட, பசுக்களுக்குத்தான் பாதுகாப்பு அதிகம் என்று பாலிவுட் நடிகை டிவிங் கிள் கண்ணா, தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

டெல்லி ஜேஎன்யு பல்கலைக் கழக மாணவர்கள் மீது  இந்து ரக்ஷா என்ற அமைப்பு கடந்த 5 ஆம் தேதி தாக்குதல் நடத்தியது. இதற்கு நாமு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில்  தனது டீவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள  டிவிங்கிள் கண்ணா,“வன்முறையால் நீங்கள் மக்களை அடக்க முடியாது. இன்னும் அதிகப்போராட்டங்கள், வேலை நிறுத்தங்கள் நடைபெறும். தொடர்ந்து மக்கள் சாலைகளில் இறங்குவர்” என்றும் அரசை எச்சரித்துள்ளார்.

பிரபல ஹிந்தி நடிகர் அக்ஷய்குமாரின் மனைவியான டிவிங்கிள்கண்ணா, பாஜக மற்றும் பிரதமர் மோடி அரசின் மீது விமர்சனங்களை துணிந்து முன்வைத்து வருபவர் . இதனை பிரதமர் மோடியே ஒருமுறை கூறினார்.

கடந்த 2016 மக்களவைத் தேர்தலின் போது நடிகர் அக்ஷய் குமார் பிரதமர் மோடியை நேர்காணல் செய்தார். அப்போது ‘ட்விட்டரில் நீங்கள் எந்தளவு மக்களைப் பின்தொடர்கிறீர்கள்?’ என மோடியிடம் அக்ஷய் குமார், கேள்வி எழுப்பினார். 

அதற்குப் பதிலளித்த மோடி,“நான் உங்களையும் உங்கள் மனைவி டிவிங்கிளின் ட்விட்டர்கணக்கையும் பின் தொடர்ந்து வருகிறேன். உங்கள் மனைவி பல நேரம் தன் கோபங்களை எல்லாம் என் மீது கொட்டிவிடுவதால் உங்கள் இல்லற வாழ்க்கை அமைதியாய் இருக்கும் என்றே நினைக்கிறேன்; இந்த வகையில், நான் உங்களுக்கு பயனளிக்கிறேன் அக்ஷய்” என்று சிரித்துக் கொண்டே தெரிவித்தார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சமந்தாவின் ஹனிமூன் பிளான்: ராஜ் உடன் ரொமான்டிக் டிரிப் எங்கே?
ஒரே ஆண்டில் 2 தோல்விகள் கொடுத்த பிரபாஸ்!