திரையுலகில் அடுத்த சோகம்..! காதல் கோட்டை உள்ளிட்ட 1000 படங்களுக்கு நடனம் அமைத்த சம்பத்ராஜ் அதிர்ச்சி மரணம்!

By manimegalai a  |  First Published May 4, 2023, 3:04 PM IST

நடிகர் மனோபாலா இறந்த சோகம் ரசிகர்கள் மனதை விட்டு நீங்குவதற்கு முன்பாகவே, தமிழ் திரையுலகில் 1000 படங்களுக்கு மேல் நடனம் அமைந்த, நடன இயக்குனர் சம்பத்ராஜ் மரணமடைந்துள்ள தகவல், திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 


54 வயதாகும் பிரபல நடன இயக்குனர் சம்பத்ராஜ் திடீர் என மரணமடைந்துள்ள தகவல் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர் தமிழ், தெலுங்கு, போன்ற தென்னிந்திய மொழிகளில்... சுமார் 1000-திற்கும் மேற்பட்ட படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். குறிப்பாக சரிகமபதநி, சின்ன ஜமீன், மதுமதி, அமராவதி, காதல் கோட்டை, வான்மதி, நம்மஅண்ணாச்சி, என் சுவாச காற்று, ஹானஸ்ட் ராஜ், ஊட்டி
 அதர்மம், உள்ளிட்ட படங்களாகும்.

அஜித்தின் முதல்படமான அமராவதி, மற்றும் அஜித்தின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய ஹிட்டாக அமைந்த காதல் கோட்டை போன்ற படங்களுக்கு, நடனம் அமைத்தவரும் இவரே. இவருக்கு ஏற்கனவே ஆஞ்சியோ செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக தொடர்ந்து ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்துள்ளார். சிறுநீரக பிரச்சனை சம்மந்தமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில், திடீர் என மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

Tap to resize

Latest Videos

இந்த சம்பவம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளம் மூலமாக பலர் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இவரின் சகோதரர் ஹரீஷும் நடன இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் உடல் இறுதி அஞ்சலிக்காக தற்போது வளசரவாக்கத்தில் உள்ள அவரின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று 4 மணி அளவில் இறுதி ஊர்வலம் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

click me!