
’இவ்வளவு நாட்களும் சிம்புவின் தோழியாக இருந்த நான் இரு தினங்களாக அவரது தீவிர ரசிகையாகிவிட்டேன்’என்று ஒரு பகீர் ட்விட் பகிர்ந்திருக்கிறார் பா.ஜ.க.வின் தமிழக ட்விட்டர் பீரங்கிகளுல் ஒருவரான நடிகையும் நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம்.
ட்விட்டரில் பா.ஜ.கவுக்கு ஆதரவாக கருத்துகள் போட்டு பத்துப்பைசாவுக்கு பெறாமல் வெட்டியாய் மல்லுக்கட்டிக்கொண்டிருந்த நிலையில் இப்படி ஒரு வாய்ப்புக்கு சிபாரிசு செய்த சிம்புவை வாழ்த்துவதில் என்ன தவறு என்று நினைத்தோ என்னவோ சற்றுமுன் போட்ட ட்விட்டில் ஓவர் உணர்ச்சி வசப்பட்டிருக்கிறார் காயத்ரி ரகுராம்.அந்தப் பதிவில்,...4 வயதில் இருந்தே என் நண்பன் சிம்பு...இந்தப் பாடலில் பணியாற்றியதன் மூலம் சாவதற்குள் சாதிக்க வேண்டிய ஒன்றைச் சாதித்துவிட்டேன். அவரது அறிவையும் திறமையையும் கண்டு மயங்கிவிட்டேன்.இவ்வளவு நாள் அவரது தோழியாக இருந்த நான் இந்தப் பாடலுக்குப் பணியாற்றத் தொடங்கியது முதல் அவரது ரசிகையாகிவிட்டேன்’என்று ஷாக் மேல் ஷாக் கொடுக்கிறார் காயத்ரி.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.