விஜய் சேதுபதி முதல் விஜய் சேதுபதி வரை...11 ஹீரோக்களுக்குப் பின்னால் ரவுண்டடித்த இயக்குநர்...

Published : May 28, 2019, 04:38 PM IST
விஜய் சேதுபதி முதல் விஜய் சேதுபதி வரை...11 ஹீரோக்களுக்குப் பின்னால் ரவுண்டடித்த இயக்குநர்...

சுருக்கம்

‘சிந்துபாத்’படத்தின் கதையை அஜீத்,விஜய் தொடங்கி 11 ஹீரோக்களிடம் சொன்னதாகவும் அத்தனை பேரும் அக்கதையை நிராகரித்த நிலையில் மீண்டும் யு டர்ன் அடித்து விஜய் சேதுபதியிடமே வந்ததாகவும் இயக்குநர் அருண்குமார் கூறியுள்ளார்.

‘சிந்துபாத்’படத்தின் கதையை அஜீத்,விஜய் தொடங்கி 11 ஹீரோக்களிடம் சொன்னதாகவும் அத்தனை பேரும் அக்கதையை நிராகரித்த நிலையில் மீண்டும் யு டர்ன் அடித்து விஜய் சேதுபதியிடமே வந்ததாகவும் இயக்குநர் அருண்குமார் கூறியுள்ளார்.

‘பண்ணையாரும் பத்மினியும்’,’சேதுபதி’ படங்களை இயக்கிய அருண்குமாரின் மூன்றாவது படம் ‘சிந்துபாத்’. மூன்றாவது முறையாக அருண்குமாரின் இயக்கத்தில் விஜய்சேதுபதி ஹீரோவாகும் நடிக்கும் இப்படத்தில் அஞ்சலி ஹீரோயினாக நடிக்கிறார். இன்னொரு முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதியின் திருட்டுத் தொழில் பார்ட்னராக அவரது மகன் சூர்யா நடித்துள்ளார்.

இப்படம் மிக விரைவில் ‘சிந்துபாத்’ படக்கதையை தமிழ்சினிமாவின் அத்தனை முக்கிய ஹீரோக்களிடமும் சொல்லி அலைந்த கதையை பகிர்ந்துள்ளார் அருண்குமார். இது தொடர்பான அவரது பேட்டியில்,” இக்கதையை முதலில் விஜய் சேதுபதிக்குத்தான் சொன்னேன். மூன்றாவதாக ஒரு படமும் சேர்ந்து பண்ணவேண்டுமா என்ற யோசனையில் விஜய் சேதுபதியும் சில ஹீரோக்களுக்கு சிபாரிசு பண்ண நானும் சிலரிடமும் முயற்சிக்க என்று அஜித்,விஜய்,விக்ரம், ஜெயம் ரவி தொடங்கி உதயநிதி ஸ்டாலின் வரை 11 ஹீரோக்களுக்குக் கதை சொன்னேன்.

ஆனால் யாரிடமிருந்தும் ஓ.கே. என்ற பதில் வரவில்லை. அந்நிலையில்தான் நாமே மறுபடியும் சேர்ந்து பண்ணலாம் என்று சிந்துபாத் வாய்ப்பை விஜய் சேதுபதி உருவாக்கினார்’ என்கிறார் அருண்குமார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நான் யாரையும் திருமணம் செய்யவில்லை - பட்டாஸ் பட நடிகை மெஹ்ரீன் ஆவேசம்!
மாதம்பட்டி ரங்கராஜ் ஜாமினில் வெளியே வரமுடியாதபடி வழக்குப்பதிவு... ஜாய் கிரிசில்டாவின் அடுத்த அதிரடி