ஜூலி ரொம்ப நல்லவ..! அவளுக்கு நான் வழிகாட்டுவேன் - சர்டிஃபிகேட் கொடுக்கும் கலா...!

 
Published : Oct 30, 2017, 07:16 PM ISTUpdated : Sep 19, 2018, 01:22 AM IST
ஜூலி ரொம்ப நல்லவ..! அவளுக்கு நான் வழிகாட்டுவேன் - சர்டிஃபிகேட் கொடுக்கும் கலா...!

சுருக்கம்

Dance director Kala says Julie is very good and she will be the guide.

பிக்பாஸில் கலந்து கொண்டு பெரும்பாலானோரிடம் வெறுப்பை சம்பாதித்த ஜூலி மிகவும் நல்லவள் என்றும் அவளுக்கு தான் வழிகாட்டியாக இருப்பேன் எனவும் நடன இயக்குனர் கலா  தெரிவித்துள்ளார். 

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகியது. இதில் மற்ற கலைஞர்களுடன் ஜூலி என்ற ஆட்டொ ஓட்டுனரின் மகளும் கலந்து கொண்டார். 

இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்து மக்களின் கவனத்தை தனியாக ஈர்த்தார். 

இதையடுத்து பிக்பாஸில் கலந்து கொண்டு மக்களின் எதிர்ப்பார்ப்பை தவிடு பொடியாக்கினார் ஜூலி. இதனால் தமிழகம் எங்கும் ஜூலி எதிர்ப்பலைகள் கிளம்பின. 

இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும்போது ஜூலிக்கு ஆங்கராக வேண்டும் என்பது தனது ஆசை என தெரிவித்திருந்தார். 

அதன்படி தற்போது ஓடி விளையாடு பாப்பா என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளினி வாய்ப்பை ஜூலிக்கு கொடுத்துள்ளார் நடன இயக்குனர் கலா.

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது,  பிக்பாஸில் கலந்து கொண்டு பெரும்பாலானோரிடம் வெறுப்பை சம்பாதித்த ஜூலி மிகவும் நல்லவள் என்றும் அவளுக்கு தான் வழிகாட்டியாக இருப்பேன் எனவும் தெரிவித்தார். 

மேலும் ஆரம்ப கால கட்டத்தில் அனைவருக்கும் ரஜினி கமல் போன்றவர்களை பிடிக்கும்போது தனக்கு ரகுவரனைதான் பிடிக்கும் எனவும் ஜூலி முன்பு இருந்ததை விட மிகவும் பொறுப்பாக செயல்படுகிறார் என தெரிவித்தார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அனல் பறக்கும் அரசியல் வரிகள்; ஜன நாயகன் 2-வது சிங்கிள் ‘ஒரு பேரே வரலாறு’ ரிலீஸ் - ரசிகர்கள் உற்சாகம்!
நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!