’எங்கிருந்தாலும் வாழ்க’ படத்தை விட்டு தப்பி ஓடிய பிரிடிஷ் நடிகையை வாழ்த்தும் ராஜமவுலி...

Published : Apr 06, 2019, 03:13 PM IST
’எங்கிருந்தாலும் வாழ்க’ படத்தை விட்டு தப்பி ஓடிய பிரிடிஷ் நடிகையை வாழ்த்தும் ராஜமவுலி...

சுருக்கம்

எஸ்.எஸ்.ராஜமவுலியின் ’ஆர்.ஆர்.ஆர்’ படத்திலிருந்து பிரிடிஷ் நடிகை டெய்ஸி வெளியேறியுள்ள நிலையும் ‘அவருக்கு பிரமாதமான எதிர்காலம் இருக்கிறது’ என்று வாழ்த்துக்கூறி வழியனுப்ப்பி வைத்திருக்கிறது படக்குழு.

எஸ்.எஸ்.ராஜமவுலியின் ’ஆர்.ஆர்.ஆர்’ படத்திலிருந்து பிரிடிஷ் நடிகை டெய்ஸி வெளியேறியுள்ள நிலையும் ‘அவருக்கு பிரமாதமான எதிர்காலம் இருக்கிறது’ என்று வாழ்த்துக்கூறி வழியனுப்ப்பி வைத்திருக்கிறது படக்குழு.

'பாகுபலி’ படத்துக்கு பிறகு ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் படம் ’ஆர்ஆர்ஆர்’. அல்லுரி சிதாராமாஜு, கொமரம் பீம் என்ற இரண்டு சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கையை முன்வைத்து 1920-களில் கதை நடைபெறுகிறது. இந்தப் படத்தின் மூலம் மஹதீரா படத்துக்கு பிறகு ராம் சரண் - ராஜமவுலி ஆகியோர் இணைந்துள்ளனர்.அதேபோல் முதல்முறையாக ஜூனியர் என்டிஆரும், ராம் சரணும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகி வரும் இந்தப் படத்தின் தொடக்க விழா கடந்த நவம்பர் மாதத்தில் துவங்கியது.

அஜய்தேவ்கன், அலியாபட், நடிகை டெய்ஸி எட்கர் ஜோன்ஸ், சமுத்திரகனி ஆகியோர் இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகினர். இந்நிலையில் ஜுனியர் என்டிஆருக்கு ஜோடியாக நடிக்க இருந்த நடிகை டெய்ஸி எட்கர் ஜோன்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.அச்செய்தி மீடியாக்களில் தீப்பிடித்துக்கொண்டிருந்த நிலையில் டெய்ஸி  படத்திலிருந்து விலகியுள்ளார்.

அவர் வெளியேறியதற்கான காரணத்தை வெளியே சொல்ல விரும்பாத படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் ’தவிர்க்க முடியாத காரணங்களால் டெய்ஸி எங்கள் படத்திலிருந்து வெளியேறிவிட்டார். எங்களோடு பணியாற்றவில்லை என்றாலும் அவருக்கு பிரமாதமான எதிர்காலம் காத்திருக்கிறது’ என்று பதிவிட்டுள்ளனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: அப்பாவை கட்டிப்பிடித்து கதறி அழுத சரவணன் : கூலா வேடிக்கை பார்த்த மயில்!
டபுள் எவிக்‌ஷன்... பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் காலியாகப்போகும் 2 விக்கெட் யார்?