
'அவெஞ்சர்ஸ்' சூப்பர் ஹீரோ ஹாலிவுட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த வரிசையில் 'அவெஞ்சர்ஸ் என்ட் ஹோம்' என்கிற படம் இந்த மாத இறுதியில் திரைக்கு வர உள்ளது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள, இந்த படத்திற்கான பாடலை இசையமைப்பாளர், ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து பாடியுள்ளார். இந்தி பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரப்பரப்பை பெற்றது.
தமிழ் பாடல் வெளியிடும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் ஏ.ஆர்.ரகுமான், நடிகர் விஜய் சேதுபதி, நடிகை ஆண்ட்ரியா, பாடலை எழுதிய விவேக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான் பேசும் போது, எதிர்காலத்தில் இந்தியாவிலும் அவெஞ்சர்ஸ் மாதிரியான படங்கள் உருவாக வேண்டும் என கூறினார். 'அவெஞ்சர்ஸ்' படம் பற்றி தெரியாதவர்களுக்கு இந்தப் பாடல் ஒரு பாலமாக இருக்கும் என்றும், இதில்நடனம் ஆடி பாடியுள்ளதாக தெரிவித்தார்.
இதை தொடர்ந்து பேசிய நடிகர் விஜய் சேதுபதி, 'அவெஞ்சர்ஸ்' படத்தில் அயன் மேனுக்கு தமிழில் குரல் கொடுத்தது மூலம் இந்த படத்தில் ஒரு அங்கமாக இருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன் என்றார். பிளாக் விடோ கதாபாத்திரத்திற்கு தமிழில் ஆண்ட்ரியா டப்பிங் குரல் கொடுத்துள்ளார். தமிழ்ப் பதிப்புக்கு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.