
இமானே தனது பாடல்களையும் பின்னணி இசையையும் காப்பி அடிப்பதில் மகா சமர்த்தர் என்னும் நிலையில், அவரது ‘விஸ்வாசம்’ பட பின்னணி இசையை இந்திப்பட இசையமைப்பாளர் ஒருவர் காப்பி அடித்திருப்பது கோடம்பாக்கத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இச்செய்தியால் தமிழ் சினிமா இசை ரசிகர்கள் புல்லரிப்படைந்துள்ளனர்.
ரித்தேஷ் தேஷ்முக், சித்தார்த் மல்கோத்ரா, ரகுல் பிரீத் சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தி படம் 'மர்ஜாவன்'. இந்த படத்தின் டிரெய்லர் இணையத்தில் நேற்று வெளியிடப்பட்டது. தற்போது யூடியூப் பக்கத்தில் முதல் இடத்தில் டிரெண்டாகி வருகிறது.
இந்த டிரெய்லர் பார்த்த அஜித் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இமான் ரசிகர்கள் நம்ப முடியாமல் தங்களைத் தாங்களே கிள்ளிப்பார்த்துக்கொண்டனர். ஏனென்றால் அஜித் நடித்த 'விஸ்வாசம்' படத்தின் பின்னணி இசை அப்படியே இந்த ட்ரெய்லரின் இறுதியில் வரும் காட்சிகளுக்கு பயன்படுத்தி இருந்தார்கள். இந்த பின்னணி இசை 'விஸ்வாசம்' படத்தில் அஜித் அறிமுகமாகும் காட்சியில் வரும்.
தனது ரசிகர்களை விட அதிக அதிர்ச்சி அடைந்த இசையமைப்பாளர் இமான் தனது டுவிட்டர் பதிவில், ‘மர்ஜாவன்’ இந்திப் படத்தின் ட்ரெய்லரில் ’விஸ்வாசம்’ படத்தின் பின்னணி இசை பயன்படுத்தப்பட்டிருப்பது எனக்குத் தெரியாது. தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து, இசை உரிமை பெற்றுள்ள நிறுவனத்திடமிருந்தோ முன்கூட்டியே எதுவும் என்னிடம் தெரிவிக்கப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார். தற்போது அந்த ட்ரெஇயிலரில் இமானின் பெயரும் இணைக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.