மாறுவேடத்தில் சென்னை திரும்பிய சிம்பு...ரெட் அடிக்கக் காத்திருக்கும் தயாரிப்பாளர்கள்..

Published : Sep 28, 2019, 10:04 AM IST
மாறுவேடத்தில் சென்னை திரும்பிய சிம்பு...ரெட் அடிக்கக் காத்திருக்கும் தயாரிப்பாளர்கள்..

சுருக்கம்

 வடிவேலு மாதிரியே சிம்புவை ஒரு மூனு வருஷம்  படங்கள் இல்லாம காயப்போட்டாத்தான் சினிமாவோட அருமை அவருக்குத் தெரியும் என்று சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் எடுத்த முடிவு சிம்புவுக்கு சொல்லப்பட்டபோது வழக்கமாக ஆணவமாக பதில் அளிக்கும் அவர் இம்முறை எடுத்த முடிவுதான் சென்னையில் இருந்து எஸ்கேப் ஆனது.

சுமார் இரண்டு மாதகாலத்துக்கும் மேலாக தாய்லாந்து உள்ளிட்ட சில சொகுசு நாடுகளில் தலைமறைவாக சுற்றித் திரிந்த நடிகர் சிம்பு நேற்று முற்றிலும் வேற ஒரு கெட் அப்பில் சென்னை திரும்பினார். கருப்புதான் எனக்குப் புடிச்ச கலரு என்பது போல் முற்றிலும் கருப்பு காஸ்ட்யூம்களோடு ஏர்போர்ட்டில் இருந்து வெளியேறிய புகைப்படங்கள் வைரலாகிவருகின்றன.

’வந்தா ராஜாவாத்தான் வருவேன்’படத்தில் நடித்த செண்டிமெண்டோ என்னவோ அடுத்து தமிழ் சினிமாவுக்குள் எதுவாகவுமே வரமுடியாமல் தவிக்கிறார் சிம்பு. ‘மாநாடு’படத்திலிருந்து அவர் தூக்கி அடிக்கப்பட்ட பிறகு அவரால் பாதிக்கப்பட்ட அத்தனை தயாரிப்பாளர்களும் ஒன்று சேர ஆடித்தான் போனார் சிம்பு. வடிவேலு மாதிரியே சிம்புவை ஒரு மூனு வருஷம்  படங்கள் இல்லாம காயப்போட்டாத்தான் சினிமாவோட அருமை அவருக்குத் தெரியும் என்று சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் எடுத்த முடிவு சிம்புவுக்கு சொல்லப்பட்டபோது வழக்கமாக ஆணவமாக பதில் அளிக்கும் அவர் இம்முறை எடுத்த முடிவுதான் சென்னையில் இருந்து எஸ்கேப் ஆனது.

அவர் மறுபடியும் சென்னை திரும்பியிருக்கும் நிலையில் அவரால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்கள் நாளை ஞாயிறன்று ஒன்று கூடி, ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான பதில் சொல்லி, கால்ஷீட் தராத பட்சத்தில் அவருக்கு ரெட் விதித்து புதிய படங்கள் எதிலும் நடிக்கவிடாமல் தடுக்கவேண்டும் என்பதில் மிக உறுதியாக இருக்கிறார்களாம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி