இரண்டாம் திருமணத்திற்கு தயாரான டி.இமான்...பெண் யார் தெரியுமா?

Kanmani P   | Asianet News
Published : Mar 05, 2022, 12:23 PM IST
இரண்டாம் திருமணத்திற்கு தயாரான டி.இமான்...பெண் யார் தெரியுமா?

சுருக்கம்

விவாகரத்து அறிவிப்பு வெளியான கொஞ்ச நாட்களில் இமான் மருமணத்திற்கு தயாராகி விட்டதாக சொல்லப்படுகிறது...

பிரபல இசையமைப்பாளரான டி. இமான்.. இவர் கன்னடம் , மலையாளம் , தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படத் துறையிலும் பணியாற்றியுள்ளார் . 2002 இல் தமிழன் படம் மூலம்  இசையமைப்பாளராக அறிமுகமான இமான்.. 100 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். 

சிறந்த இசை அமைப்பாளராக தேசிய திரைப்பட விருதை வென்ற ஐந்தாவது தமிழ் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது... அதோடு பிலிம்பேர் விருதுகள், தமிழ்நாடு மாநில திரைப்பட விருது ,விஜய் விருதுகள் , எடிசன் விருது, ஆனந்த விகடன் சினிமா விருது மற்றும் ஜீ தமிழ் விருது உள்ளிட்ட பல விருதுகளை தட்டி சென்றுள்ளார்.

சமீபத்தில் அண்ணாத்தே, உடன்பிறப்பு உள்ளிட்ட படங்களுக்கு மாஸ் இசை அமைத்து ரசிகர்கள் மனதை கவர்ந்திருந்தார் இமான்...இவ்வாறு தனது தொழிலில் கோடி கட்டி பறந்து வரும் இமானின் குடும்ப வாழ்க்கை பல சிக்கல்களை சந்தித்து வருகிறது...

கடந்த 2008-ம் ஆண்டு மோனிகா என்பவரை  திருமணம் செய்து கொண்டார் இமான்..  இந்த தம்பதிகளுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். சுமூகமாக சென்று கொண்டிருந்த இவர்களின் மண வாழ்வில் சில சிக்கல்கள் ஏற்பட்டதன் விளைவாக 2020-ம் ஆண்டு நவம்பர் மாதமே இருவரும் விவாகரத்து செய்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் இவர்களது அதிகாரப்பூர்வ விவாகரத்து குறித்து ட்வீட்டில் பதிவிட்ட இமான்..'எனது நலம் விரும்பிகள் மற்றும் தீவிர இசை ஆர்வலர்கள் அனைவரும் எனக்கு உறுதுணையாக இருந்ததற்காக நான் உண்மையிலேயே நன்றியுள்ளவனாக இருக்கிறேன். எங்களின் வாழ்க்கை வெவ்வேறு பாதைகளில் செல்லவே, மோனிகா ரிச்சர்டும் நானும் நவம்பர் 2020 முதல் பரஸ்பர சம்மதத்துடன் சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்து, இனி கணவன் மனைவியாக இருக்க முடியாது என்று முடிவெடுத்தோம். என அறிவித்தார்..

விவாகரத்து அறிவிப்பு வெளியான கொஞ்ச நாட்களில் இமான் மருமணத்திற்கு தயாராகி விட்டதாக சொல்லப்படுகிறது...சென்னையை சேர்ந்த உமா என்பவருக்கும் இமானுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாம்.. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!