அட...குக்வித் கோமாளி சுனிதா கமிட்டடா!..லவ்வர் இவர் தானா ?..

By Kanmani P  |  First Published Mar 5, 2022, 10:49 AM IST

ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில்  டான்ஸ் தனக்கு ஜோடியாக ஆடியவரை சுனிதா காதலிப்பதாக செய்தி உலா வருகிறது..


பட்டி தொட்டியெல்லாம் பிரபலமான நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி தான்.. விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட அதிக பார்வையாளர்களைக் கடந்த நிகழ்ச்சியாக என்றால் அது இந்த நிகழ்ச்சி தான்.  இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். இதுவரை இரண்டு சீசன் முடிந்துள்ளது. முதல் சீசனில் வனிதாவும், இரண்டாவது சீசனில் கனியும் டைட்டில் ஜெயித்தனர்.

Tap to resize

Latest Videos

undefined

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3-வது சீசன் சமீபத்தில் தொடங்கியது. இதில் போட்டியாளர்களாக மனோபாலா, அம்மு அபிராமி, ஸ்ருத்திகா, கிரேஸ் கருணாஸ், வித்யூலேகா, தர்ஷன், சந்தோஷ் பிரதாப், ரோஷினி, ராகுல் தாத்தா, ஆண்டனி தாசன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். இந்நிகழ்ச்சியின், சிறப்பம்சமே கோமாளிகள் தான், அதன்படி இந்த சீசனில் புகழ், பாலா, சிவாங்கி, சுனிதா, மூக்குத்தி முருகன், பரத், அருண், ஷக்தி, குரேஷி, மணிமேகலை ஆகியோர் உள்ளனர். 

இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக வந்ததன் மூலம் மக்கள் மனதில் பதித்தவர் சுனிதா..இவர் குறித்த சில கிசுகிசுக்கள் உலா வந்த வண்ணம் உள்ளது..அதாவது சுனிதா ஜோடி நம்பர் 1-ல் சுனிதாவுடன் டான்ஸர் வாங் என்பவர் ஜோடியாக நடனமாடியிருந்தார்..இவர்களது நடனத்திற்கு ஏகோபித்த பாராட்டுக்கள் கிடைத்திருந்தன...

இந்நிலையில் இவர்கள் இருவரும் காதலிப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் பரவியது..இதற்கிடையே சமீபத்தில் யூடுயூப் மூலம் ரசிகர்ளை சந்தித்த சுனிதா அவர்களுடன் உரையாடிக்கொண்டிருக்கும் போது..திடீரென என்ட்ரி கொடுத்த வாங் கையில் ரோஜுடன் தன காதலை சொன்னார்...பின்னர் இறுதியில் இது பிராங்க் என்றும் இருவரும் நல்ல நண்பர்கள் என்றும் தெரிவித்தனர்..இதன் மூலம் சுனிதா குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது..

click me!