
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'லிங்கா' படத்தில், ஹீரோயினாக நடித்திருந்தவர் பாலிவுட் பட நடிகை, 'சோனாக்ஷி சின்ஹா'. இவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட வீடியோ ஒன்றுக்கு, மோசமாக கமெண்ட் செய்த நபரை சைபர் கிரைம் போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
பாலிவுட் திரையுலகை பொறுத்தவரை, சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பின், ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பலர் வாரிசு நடிகர் நடிகைகளை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் பிரபல நடிகையும், நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகளுமான சோனாக்ஷி சின்ஹா சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றிற்கு, மிகவும் மோசமான வார்த்தையால் நெட்டிசன் ஒருவர், விமர்சனம் செய்திருந்தார். இவரின் பதிவை பார்த்து கடுப்பான சோனாக்ஷி சின்ஹா... இது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில், சோனாக்ஷி சின்ஹாவை விமர்சித்த... அந்த நபவரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அந்த நபரின் பெயர் ஜாதவ் என்பதும், அவர் உணவகம் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.