Santhanam : கட்டுமான ஒப்பந்ததாரரை தாக்கிய வழக்கு... நடிகர் சந்தானத்துக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

By Asianet Tamil cinema  |  First Published Jul 1, 2022, 3:35 PM IST

Santhanam : கட்டுமான ஒப்பந்ததாரரை தாக்கியதாக சந்தானம் மீது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.


தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த சந்தானம், சமீப காலமாக ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு சென்னை வளசரவாக்கத்தில் உள்ள கட்டுமான நிறுவனத்துடன் சேர்ந்து குன்றத்தூர் அருகே கல்யாண மண்டபம் ஒன்றை கட்டுவதற்காக, அந்நிறுவத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவரிடம்  ரூ.3 கோடி முன்பணமாக கொடுத்துள்ளார்.

இதையும் படியுங்கள்... பாலிவுட் நடிகைக்கு நோ சொல்லிவிட்டு... தன்னைவிட 20 வயது குறைவான நடிகையுடன் ஜோடி சேர ஆசைப்படும் எஸ்.கே

Tap to resize

Latest Videos

அந்த பணத்தை பெற்றுக்கொண்ட சண்முகசுந்தரம், மண்டபத்தை கட்டிக்கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. பின்னர் சந்தானம் கொடுத்த 3 கோடி ரூபாய் முன்பணத்தை முழுவதுமாக திருப்பிக் கொடுக்காமல், சில லட்சங்களை பாக்கி வைத்த சண்முக சுந்தரம் மீதிப்பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... ஹரியின் கமர்ஷியல் மேஜிக் ஒர்க் அவுட் ஆனதா? இல்லையா?.. அருண்விஜய்யின் யானை படம் எப்படி இருக்கு?- முழு விமர்சனம்

இதையடுத்து சந்தானம் தனக்கு தர வேண்டிய பணத்தைக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது சண்முக சுந்தரத்துக்கும், சந்தானத்துக்கும் இடையே ஏற்பட்ட வாய்த் தகறாறு முற்றி கைகலப்பாக மாறியது. இதையடுத்து இருவரும் தாக்கிக் கொண்டனர். இதையடுத்து சந்தானம் மீது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சண்முக சுந்தரம் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்தார்.

இதையும் படியுங்கள்... Rolex ரேஞ்சுக்கு சூர்யாவுக்கு ஒரு ரோல்... ராக்கெட்ரி மூலம் மாதவன் சாதித்தாரா? சோதித்தாரா? - முழு விமர்சனம் இதோ

கட்டுமான ஒப்பந்ததாரரை தாக்கிய வழக்கின் விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணைக்காக வருகிற ஜூலை 15-ந் தேதி நடிகர் சந்தானம் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.

click me!