கார்பரேட் கைகூலியா விஜய்சேதுபதி..? போராட்டத்தை தொடங்கிய வியாபாரிகள்..!

Published : Oct 30, 2019, 01:42 PM IST
கார்பரேட் கைகூலியா விஜய்சேதுபதி..?  போராட்டத்தை தொடங்கிய வியாபாரிகள்..!

சுருக்கம்

ஆன்லைன் வர்த்தகத்தை ஆதரிக்கும் நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக மளிகை வியாபாரிகள் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.   

முதல் பலசரக்கு ஆன்லைன் வர்த்தகமான மண்டி விளம்பரத்தில் விஜய்சேதுபதி நடித்த விளம்பரம் ஒளிபரப்பாகிறது. MUNDIE ஆன்லைன் வர்த்தகமானது உப்பு முதல் பற்பசை வரையிலான பலசரக்குகளை விற்பனை செய்து வருகிறது. அந்த விளம்பரத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ளதால் வியாபாரிகள் அவருக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

 

’’ஆன்லைன் வர்த்தகத்தால் வாழ்விழக்கும் கடைக்காரர்களில் ஒருவராக உங்களை வேண்டுகிறேன். எங்களில் ஒருவராக உங்களை நினைத்து வருகிறோம். உங்கள் அருகில் உள்ள கடைக்காரர்களை வாழ விடுங்கள். இதன் மூலம் பல லட்சம் ஏழை வணிகர்களின் வாழ்வாதாரம் நேரடியாக பாதிக்கும். பணத்திற்காக கார்ப்பரேட் கைக்கூலியாக செயல்படுவதை தவிருங்கள். நுகர்பொருள் விநியோகஸ்தர்களின் வேண்டுகோளாக, நீங்கள் நடித்து தற்போது ஒளிப்பரப்பாகும் மண்டி  ஆன்லைன் விளம்பரத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தோம். ஒருவிளம்பரத்தில்  நடிப்பதற்கு முன் அதில் உள்ள சாதக பாதங்களை ஆராயமாட்டீர்களா?’’என கேள்வி எழுப்பி வருகிறார்கள் வியாபாரிகள். 

அதனைத் தொடர்ந்து இந்த விளம்பரப்படத்தில் நடித்துள்ள விஜய்சேதுபதிக்கு எதிராக வியாபாரிகள் போராட்டங்களை தொடங்கி உள்ளனர். இந்த போராட்டங்களை விரைவில் தமிழகம் தழுவிய அளவில் நடத்தவும் வியாபாரிகள் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?