
வருடத்துக்கு நான்கைந்து படங்களில் நடிக்கும் நடிகர் சிம்பு கடந்த ஆண்டு ‘வந்தா ராஜாவாத்தான் வருவேன்’என்கிற ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்ததால் கைச்செலவுக்கூட பணம் இல்லாமல் பயங்கர நிதி நெருக்கடியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது அவரது அவசரத் தேவைகளுக்கு ஒரு நடிகைதான் உதவி வருகிறாராம்.
சர்ச்சைகளின் உச்சத்தில் இருக்கும் சிம்பு இந்த ஆண்டில் ஒப்பந்தமான இரண்டு படங்களிலிருந்தும் வெளியேறியிருக்கிறார். அதையடுத்து புதிய படங்கள் எதிலும் அவர் ஒப்பந்தமாகவில்லை. 2018ல் அவர் நடித்து வெளிவந்த ஒரே படம் மணிரத்னத்தின் செக்கச்சிவந்த வானம். அடுத்து அதே ஆண்டில் ஒப்பந்தமான சுந்தர்.சியின் ‘வந்தா ராஜாவாத்தா வருவேன்’படம் இந்த ஆண்டு பிப்ரவரி 1ம் தேதியன்று ரிலீஸானது.
இந்நிலையில் படங்களுக்கு கால்ஷீட் சொதப்பும் சர்ச்சைகள் மறைந்து சிம்பு மீது பரிதாபம் கொள்ளவைக்கும் செய்தி ஒன்று வைரலாகப் பரவி வருகிறது. பயங்கர செலவாளியான சிம்பு கடல் போல வீடு இருந்தாலும் சென்னையில் நட்சத்திர ஓட்டில் ஒன்றில்தான் எப்போதும் தங்குவார். அடுத்து பார்ட்டிகள் இல்லாமலும் அவரால் இருக்கமுடியாது. இதற்கான பட்ஜெட்டை அவர் மூலம் ஓரளவுக்கு வருமானம் வந்தபோது ஒதுக்கிவந்த டி.ஆரும், உஷா ராஜேந்தரும் தற்போது சுத்தமாக நிறுத்திவிட்டார்களாம். ‘மாநாடு,’முஃதி’படங்களில் வாங்கிய அட்வான்ஸ் தொகை அத்தனையையும் அவர் தாய்லாந்து உல்லாசப் பயணத்தின்போது கரைத்துவிட்டதாகத் தெரிகிறது. எனவே கடந்த சில தினங்களாக அன்றாடச் செலவுக்கு வழி இல்லாமல் அல்லாடுகிறாராம். அச்செய்தி கேட்டு கலங்கிய முன்னாள் தோழி, ’ஹ’நடிகை தன் பங்குக்கு கொஞ்சம் கொடுத்து உதவுகிறாராம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.