கொரோனா வறுமை.. படவாய்ப்பு இல்லாததால்..!வண்டி தள்ளி பழம் வியாபரம் பார்க்கும் சினிமா நடிகர்..!

By T BalamurukanFirst Published May 23, 2020, 8:36 PM IST
Highlights

படவாய்ப்பு இல்லாத காரணத்தால் குடும்பச் செலவு, வாடகை உள்ளிட்ட தேவைகளுக்காக தான் பழம் விற்கும் தொழில் செய்து வருவதாகவும் நடிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

படவாய்ப்பு இல்லாத காரணத்தால் குடும்பச் செலவு, வாடகை உள்ளிட்ட தேவைகளுக்காக தான் பழம் விற்கும் தொழில் செய்து வருவதாகவும் நடிகர் சோழங்கி திவாகர் தெரிவித்துள்ளார்.பலரும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து மனதுக்குள் ரத்தக்கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு இதைவிட கொடுமையான சம்பவங்கள் தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில் அரங்கேறிக்கொண்டிருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. 

மக்களின் துயரங்களில் அரசாங்கம் தான் தாங்கி பிடிக்க வேண்டும். அப்படி நம் அரசாங்கம் செய்யவில்லை. மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் என்பதை அரசு மறந்து செயல்படுகிறது. எத்தனை ஆயிரம் கோடி கடன் வாங்கினாலும் அதை கட்ட வேண்டியது மக்கள் தான். அரசாங்கம் மக்களிடம் வாங்காமல் தன்னிச்சையாக கட்டப்போவதில்லை. இதற்கான தீர்ப்பை மக்கள் எழுதுவார்கள். 

இந்தியாவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது சில தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை இன்னும் திரும்பிவிடவில்லை. ஊரடங்கால் பலரும் வேலையில்லாமல் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

50 நாட்களுக்கும் மேலாக திரைத்துறை முடங்கியிருந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன், சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு சில நிபந்தனைகளுடன் அரசு அனுமதி அளித்திருக்கிறது. ஊரடங்கு காலத்தில் சினிமாவில் பணியாற்றும் தினசரி கூலி தொழிலாளர்களும், நடிகர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு முன்னணி நடிகர்களும் அவர்கள் சார்ந்திருக்கும் சங்கங்களும் உதவிக்கரம் நீட்டின.


இந்நிலையில், "ஆயுஷ்மான் குரானா" உடன் "ட்ரீம் கேர்ள்ஸ்" படத்தில் நடித்த நடிகர் "சோலங்கி திவாகர்" கொரோனா ஊரடங்கால் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் தனது அன்றாட தேவைகளுக்காக தெருவில் பழம் விற்று வாழ்வை நகர்த்தி வருகிறார்.
மேலும், படவாய்ப்பு இல்லாத காரணத்தால் குடும்பச் செலவு, வாடகை உள்ளிட்ட தேவைகளுக்காக தான் பழம் விற்கும் தொழில் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

click me!