கந்து வட்டி கும்பல் துணையுடன் இயக்குநரை மிரட்டும் காமெடி நடிகர் மீது போலிஸில் புகார்...

Published : Feb 09, 2019, 01:59 PM IST
கந்து வட்டி கும்பல் துணையுடன் இயக்குநரை மிரட்டும் காமெடி நடிகர் மீது போலிஸில் புகார்...

சுருக்கம்

படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வரவில்லை என்று பொதுமேடையில் புகார் சொன்னதற்காக காமெடி நடிகர் கருணாகரன் தங்களை அடியாட்களை வைத்து மிரட்டுவதாக ‘பொதுநலன் கருதி’ பட இயக்குநரும் தயாரிப்பாளரும் இன்று காலை கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்திருக்கின்றனர்.

படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வரவில்லை என்று பொதுமேடையில் புகார் சொன்னதற்காக காமெடி நடிகர் கருணாகரன் தங்களை அடியாட்களை வைத்து மிரட்டுவதாக ‘பொதுநலன் கருதி’ பட இயக்குநரும் தயாரிப்பாளரும் இன்று காலை கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்திருக்கின்றனர்.

காமெடி நடிகர் கருணாகரனுடன் இன்னும் சில புதுமுகங்கள் நடித்திருக்கும் படம் ‘பொதுநலன் கருதி’. கந்து வட்டியின் கொடுமை குறித்து விலாவாரியாகப் பேசும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு கடந்த வாரம் பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கருணாகரன் கலந்துகொண்டு பட புரமோஷனுக்கு உதவாததால் இயக்குநர் சீயோன் கருணாகரனைத் தாக்கி மேடையிலேயே பேசினார்.

இதனால் கோபமடைந்த கருணாகரன் சில அடியாட்கள் மூலம் இயக்குநர் சீயோனையும், இணை தயாரிப்பாளர் விஜய் ஆனந்தையும்  கடுமையான வார்த்தைகளால் மிரட்டியதாகத் தெரிகிறது. இதை ஒட்டி படத்தின் தயாரிப்பாளர் மற்றும் குழுவினருடன் சற்றுமுன்னர் சென்னை போலிஸ் கமிஷனர் அலுவலகம் வந்த சீயோன் கந்து வட்டிப் பார்ட்டிகளின் துணைகொண்டு கருணாகரன் தனக்கு மிரட்டல் விடுப்பதாக புகார் கொடுத்தார்.

அம்மனுவில் படத்தில் நடிக்கவும் புரமோஷனுக்கு வரவும் சம்பளமாக கருணாகரனுக்கு 25 லட்சம் தரப்பட்டதாகவும், அதன்படி நடந்துகொள்ளாத கருணாகரன், படத்தின் கதை கந்துவட்டிக்கு எதிராக இருப்பதால் அதே கோஷ்டிகளுடன் சேர்ந்து தங்களை அருவருப்பான நாகரிகமற்ற வார்த்தைகளில் மிரட்டி வருவதாகவும், அவர்களிடமிருந்து தங்களுக்குப் பாதுகாப்பு வேண்டுமென்றும் கேட்டுள்ளனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஜாடைமாடையாக பேசி வம்பிழுத்த அருணை அடிவெளுத்த முத்து - சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
1000 எபிசோடுகளை கடந்து வெற்றிநடைபோட்டு வரும் சீரியலை இழுத்து மூடும் சன் டிவி - அதிர்ச்சியில் ரசிகர்கள்