200 சதவீதம் நான் பொறுப்பில்லை... அதிர்ச்சி வீடியோவை வெளியிட்ட 'குக் வித் கோமாளி' பவித்ரா..!

Published : Jan 23, 2021, 11:57 AM ISTUpdated : Jan 23, 2021, 12:00 PM IST
200 சதவீதம் நான் பொறுப்பில்லை... அதிர்ச்சி வீடியோவை வெளியிட்ட 'குக் வித் கோமாளி' பவித்ரா..!

சுருக்கம்

விஜய் டிவி தொலைக்காட்சியில், சமையல் நிகழ்ச்சியை கூட இவ்வளவு சுவாரஸ்யமாக மாற்ற முடியுமா? என்கிற ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது, 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி. ஒவ்வொரு எபிசோடையும் கூடுதல் சுவாரஸ்யமாக்கும் அளவிற்கு, இந்த சமையல் போட்டி நடந்து வருகிறது.  

விஜய் டிவி தொலைக்காட்சியில், சமையல் நிகழ்ச்சியை கூட இவ்வளவு சுவாரஸ்யமாக மாற்ற முடியுமா? என்கிற ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது, 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி. ஒவ்வொரு எபிசோடையும் கூடுதல் சுவாரஸ்யமாக்கும் அளவிற்கு, இந்த சமையல் போட்டி நடந்து வருகிறது.

எனவே பிக்பாஸ், சூப்பர் சிங்கர், கலக்க போவது யாரு, ஆகிய நிகழ்ச்சிகளை போல் இந்த நிகழ்ச்சிக்கும் மிக பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவாகியுள்ளது. கடந்த சீசனில் ரம்யாவை விட இந்த சீசனில் கலந்து கொண்டுள்ள, பவித்ரா, தர்ஷா, ஆகியோர் இளசுகள் மனதில் அதிகம் இடம்பிடித்துவிட்டனர்.

அதே போல் ஆண் போட்டியாளர்களின் ஒருவரான அஷ்வினுக்கு இந்த நிகழ்ச்சி மூலம் அதிக பெண் ரசிகைகள் கிடைத்துள்ளனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலகலப்பாக விளையாடி வரும் பவித்ரா, அதிர்ச்சி வீடியோ ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ளதாவது...  'டிவிட்டர் பக்கங்களில் என்னை போலவே சிலர் வலம் வருகின்றனர். டிவிட்டரில் நான் அதிகமாக ஆக்டிவாக இருப்பது இல்லை. இன்ஸ்டாகிராமில் தான் அதிகம் பகிர்ந்து இருக்கிறேன். இதை அவர்கள் சாதகமாக பயன்படுத்திக் என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில் நடந்து கொள்கிறார்கள். இதை 200% அதற்கு நான் பொறுப்பல்ல. இதுதான் என்னுடைய உண்மையான டிவிட்டர் பக்கம். நான் ட்விட்டர் பக்கத்தில் ஆக்டிவாக இல்லை என்றாலும் பலர் தொடர்ந்து உங்களுடைய அன்பையும், ஆதரவையும் கொடுத்து வருகிறீர்கள் என கூறி தன்னுடைய நன்றிகளை தெரிவித்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

6 மாஸ் படங்களின் சாதனையை தவிடு பொடியாக்கிய 'துரந்தர்'! பாக்ஸ் ஆபீஸில் புதிய வரலாறு!
அருண் விஜய்யின் 'ரெட்ட தல' 25-ல் ரிலீஸ்; டிரெய்லருக்கு அமோக வரவேற்பு