Cook With Comali 3 : குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போட்டியாளர்களான ரோஷினியும், ஸ்ருதிகாவும் சேர்ந்து பீஸ்ட் படத்தில் இடம்பெறும் ஜாலியோ ஜிம்கானா பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. காமெடி கலந்த சமையல் நிகழ்ச்சியான இது இதுவரை 2 சீசன்கள் முடிந்துள்ளது. தற்போது 3-வது சீசன் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் தற்போது ரோஷினி, ஸ்ருதிகா, சந்தோஷ் பிரதாப், தர்ஷன், வித்யுலேகா, கிரேஸ் கருணாஸ், அம்மு அபிராமி ஆகிய 7 பேர் போட்டியாளர்களாக உள்ளனர். இவர்களை டார்ச்சர் செய்ய பாலா, ஷிவாங்கி, பரத், குரேஷி, அருண், சுனிதா, மணிமேகலை ஆகியோர் கோமாளிகளாக உள்ளனர். இந்நிகழ்ச்சியின் நடுவர்களாக வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு உள்ளனர்.
இந்நிலையில், இதன் போட்டியாளர்களான ரோஷினியும், ஸ்ருதிகாவும் சேர்ந்து பீஸ்ட் படத்தில் இடம்பெறும் ஜாலியோ ஜிம்கானா பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளனர். ஜெய் நடிக்கும் பிரேக்கிங் நியூஸ் படத்துக்காக போடப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான விமான செட்டின் முன்பு அவர் நடனம் ஆடியுள்ள இந்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... vignesh shivan : என் காதலோட கடைசி 5 நாள்... மனசு வலிக்குது - விக்னேஷ் சிவனின் எமோஷனல் பதிவு