பைனல்ஸ்ல்ல கூட கார குழம்பு தானா? கனியை கலாய்த்த ஏ.ஆர்.ரகுமான்! இசை புயலையே பாய் சொல்ல வைத்த தங்கதுரை! வீடியோ

Published : Apr 10, 2021, 06:32 PM IST
பைனல்ஸ்ல்ல கூட கார குழம்பு தானா? கனியை கலாய்த்த ஏ.ஆர்.ரகுமான்! இசை புயலையே பாய் சொல்ல வைத்த தங்கதுரை! வீடியோ

சுருக்கம்

விஜய் டிவியில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி. மேலும் பிரபலங்கள் பலரும் இந்த ஷோவிற்கு ரசிகர்களாக உள்ளனர். 'குக் வித் கோமாளி' சீசன் 2 நிகழ்ச்சியில் கனியின் கார குழம்பை ஏ.ஆர்.ரகுமான் கலாய்த்த புரோமோ வீடியோ வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

ஒரு சமையல் நிகழ்ச்சியை இந்த அளவிற்கு சுவாரஸ்யமாக மற்ற முடியுமா? என, அனைவரும் வியர்ந்து பாக்கும் அளவிற்கு ஒளிபரப்பாகி வருகிறது 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி. முதல் சீசனை விட அனைவரையும் கவர்ந்துள்ளது என்றால் அது இரண்டாவது சீசன் தான். இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, மற்ற மொழிகளிலும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியை எடுக்க  நிகழ்ச்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் பைனல் விரைவில் ஒளிபரப்பாக உள்ள நிலையில், அதன் புரமோஷன் வீடியோக்களை விஜய் டிவி தனது சமூக வலைதளத்தில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. பல பிரபலங்கள் நேரிலும், ஆன்லைனிலும் தோன்றி, தங்களது வாழ்த்துக்களை ஃபைனலிஸ்டுக்கு தெரிவித்துள்ளனர். அந்த வகையில் சிம்பு, சந்தோஷ் நாராயணன், பிக்பாஸ் வின்னர் முகின் உள்பட பலர் பைனல் நிகழ்ச்சிக்கு வந்துள்ள காட்சிகள் புரமோஷனில் உள்ளது.

யாரும் எதிர்பாராத விதமாக ஏ.ஆர்.ரகுமான் ஆன்லைன் மூலம் வந்து வாழ்த்தியுள்ளார். அப்போது கனியிடம் கிண்டலாக ’பைனல்ஸ்ல்ல கூட கார குழம்பு தான் வைக்க போகிறீர்களா என்று கேட்டார்.  நடுவில் தங்கதுரை வான்டடாக சென்று ஒரு ஜோக் ஒன்று சொல்கிறேன் என்றது இசை புயலே பாய் என சொல்லும் காட்சி இடம்பெறுகிறது. மொத்தத்தில் பைனல் ரசிகர்கள் எதிர்பார்த்ததை விட மிக பிரமாதமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Dhanush : பிரேக் அப் செய்து பிரிந்தார்களா தனுஷ் - மிருணாள் தாக்கூர்? காட்டுத்தீ போல் பரவும் தகவல்
Nooru Saami vs Engal Thangam Day 1 Box Office : சமந்தா vs விஜய் ஆண்டனி... முதல் நாள் வசூலில் வின்னர் யார்?